தவறாக புரிந்து கொண்டவர்களிடம்
உங்களை பற்றி புரியவைக்க போராடிக்கொண்டு இருக்காதீர்கள்!
ஒருபோதும் உன்னைப் பற்றி எவரிடமும் விளக்கம் கூறாதே!ஏனெனில்,
உன்னை நேசிக்கும் ஒருவருக்கு அது தேவைப்படுவதில்லை,
உன்னை வெறுக்கும் ஒருவர் அதை நம்பப் போவதில்லை…!!!
நீ எவ்வளவு உயர்ந்தவன் என்பது உன் பிறப்பிலோ அல்லது படிப்பிலோ அல்லது உன் பணத்திலோ அல்லது உன் அறிவிலோ அல்லது உன் புகழ்ச்சியிலோ இல்லை
மற்றவர்களை நீ எப்படி மதிக்கிறாய் என்பதில் தான் உள்ளது.
உங்கள் திறமையை கூட பலர் திமிராக பார்க்கலாம்.
மாற்றிக் கொள்ள வேண்டியது அவர்களின் பார்வையை தானே தவிர உங்களின் திறமை அல்ல.
பொறுமையாக கடந்து செல்லுங்கள் காலம் பதில் சொல்லும்..!!
அஞ்சியும் வாழாதே.. கெஞ்சியும் வாழாதே..
உனக்கான வாழ்க்கையை உண்மையாய் நேர்மையாய் வாழ்..
பழி சொல்ல தெரிந்த யாரும் உனக்கு வழி சொல்லப் போவதில்லை
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு .உன் வாழ்க்கை உன் கையில் .
அன்பு காட்ட யாரும் இல்லை என்பதை விட ,
காட்டிய அன்பை காப்பற்ற தான் யாரும் இல்லை,
என்பதே நிதர்சனமான உண்மை.
வளர்ந்த பின் வேர்கள் தேவையில்லை என,
எந்த மரமும் நிராகரிப்பதில்லை .
ஏறிய பின் ஏணி தேவையில்லை என, எந்த
உழைப்பாளியும் எட்டி உதைப்பதில்லை…
பழையதை மறக்காமல் நீ நடந்தால்,
பாதை தெளிவாகும்…
ஒருவர் நம்மை நம்பி ஒரு உண்மையை அல்லது உணர்வுகளை கண்ணீரோடு சொல்கிறார்கள் என்றால்
அந்த இடத்தில் தெய்வத்தை விட மேலாக நம் உறவை உணர்கிறார்கள் என்று அர்த்தம்.
நம்மை பற்றியும் நம் குணத்தைப் பற்றியும் விமர்சிப்பது மிகவும் எளிதானது தான்;
நாம் பயணித்த அதே பாதையில் விமர்சிப்பவர்கள் பயணம் செய்யாத வரையில்!
உன் உருவத்தை கொண்டு வருத்தபடாதே .
உன் செயல்கள் மூலம் நீ யாரென்று நிரூபி
தேவைக்கு ஏற்ப தேவைக்கு பயன்படுத்தி
தேவை முடிந்தபின் தூக்கி எறியும்
தேவையற்றவர்கள் தேவையில்லை
என வாழ்வில் யோசித்து முடிவெடுங்கள்
அதன் பிறகு உங்கள்
வாழ்க்கை தானாக உயரும்!
மௌனமாக இருப்பவர்கள் அனைவரும்
பதிலளிக்க முடியாதவர்கள் அல்ல…
யாரையும் காயப்படுத்திடாமலிருப்பதற்காக மௌனமாக இருப்பவர்களும் உள்ளனர்…
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.
நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.அதையும் பெரிது பண்ணாதே.
யாரும் தானாக மாறுவதில்லை.
யாரோ ஒருவரால் மாறுகிறோம்.
நல்லவராக…கெட்டவராக..ஏமாளியாக..
அறிவாளியாக.. முட்டாளாக.
நல்ல விஷயத்திற்காக தனியாக நிற்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் தைரியமாக நில்…!!!
வெல்வது நீ யாக தான் இருக்கும்…!!!
நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும்
உன்னை ஒருநாள் தலைகுனிய வைக்கும்.
அன்று புரியும் நீ ஏமாற்றியது அவர்களை அல்ல உன்னை என்று.
எண்ணங்கள் எப்படியோ எதிர்காலம் அப்படியே…

The problem today is people don’t cherish good people,
they try to use them
“Moving on doesn’t mean you forget about things. It just means you have to accept what’s happened and continue living.”






Users Today : 2
Users Yesterday : 4
Users Last 7 days : 55
Users Last 30 days : 301
Total Users : 8491
Views Today : 2
You must be logged in to post a comment.