பெற்றோர்களின் தியாகங்கள் இல்லாமல் எந்தக் குழந்தையும் உயர்நிலைக்கு வந்துவிடுவதில்லை.
வெறும் சோறுபோட்டு வளர்ப்பது மட்டுமே குழந்தை வளர்ப்பு ஆகிவிடாது.
பள்ளிக்கூட சம்பளமும், பாடபுத்தகங்களும் மட்டுமே அவர்களுக்குப் பலம் கொடுத்துவிடாது.
நல்லன சொல்லிக் கொடுத்தும், அல்லாதவைகளிலிருந்து அவர்களை விலகியிருக்க செய்வதுமே குழந்தை வளர்ப்பின் முக்கியமான அங்கமாக இருக்கிறது.
கெட்ட விஷயங்களிலிருந்து விலகி இருக்கிற குழந்தைகள்தான் பிற்காலத்தில் சாதனை படைக்க பலமுள்ளவர்களாகிறார்கள்.
விரல் நீளம் தான் தேள்.
கொட்டினா போதும். உச்சி மண்டைக்கு விஷம் ஏறிடும்
காமம் – விஷ ஜந்து.
சின்ன விஷயம்னு படர விட்டோம்னா,
சரசரன்னு வாழ்க்கையே நாசம் பண்ணிடும்!
ஒழுக்கமும், வாழ்க்கையும் ஒரே விதமான விஷயம்.
கல் தடுக்கும் நேரம் போதும், உயிர் பிரிய ஒழுக்கம் தவற,
பிரிந்த உயிர் உடலுக்கு வருவதும்
தவறிய ஒழுக்கம் சரி செய்வதும்
நடக்கும் காரியமா ?
போனது போனதுதான்.
தவறியது தவறியதுதான்!
எல்லா பெண்களிடமும் பேசி ஜெயித்து விட முடியாது.
எல்லா பெண்களும் நல்லவர்கள் என்றும் சொல்ல முடியாது.
வஞ்சிக்கப்பட்டு,
தானே தன் வாழ்க்கையை நகர்த்தியாக வேண்டிய நிலையில் உள்ள பெண்கள்,
சரியான அரவணைப்பும்,
நேர்மையான ஆணின் துணையும் இல்லாத பெண்கள்
வெகு எளிதாய் விஷம் கக்குவார்கள்
ஆண்களை உற்றுப் பார்க்க,
பார்வையால் அழைக்க,
கண்ணால் சம்மதம் சொல்ல வெகு சில பெண்களுக்கே முடியும்.
அவர்கள் வேறு வகையான பெண்கள்.
வாழ்க்கையை உடம்பாக பார்ப்பவர்கள்.
மனிதர்களை பணத்தால் எடை போடுபவர்கள்.
அன்பை பண்டமாற்றாய் உபயோகிப்பவர்கள்.
இம்மாதிரி பெண்கள் பிறருடைய வாழ்க்கையை ஒரே வீச்சில் அடித்து நொறுக்குவார்கள்.
எந்த அவமானத்திற்கு அஞ்சாமல் பிறரை கடுமையாக அவமானப்படுத்துவார்கள்.
அவர்கள் மூளை மிகத் துரிதமாக செயல்படும்
மனிதர்களை விரைவாகவும், துல்லியமாகவும் அவர்களால் எடை போட முடியும்.
அவர்கள் அதிகம் காயம் பட்டவர்கள், மற்றவர்களை அதிகம் காயப்படுத்துவார்கள்.
நல்லவர்கள் இவர்கள் வன்முறைக்கு ஆளானால்,
எருமையின் கீழ் சிக்கிய அல்லிக்கொடி போல, சிதைந்து போக நேரிடும்.
இம்மாதிரி பெண்களிடம், கவனமாக இருக்க வேண்டும்
ஒரு ஆளுக்கு நூறு முகங்கள்.
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு முகம்
எல்லா இடத்திலும்
ஒரே புத்தியாய் இருக்கிறவன் தான் நல்லவன்








Users Today : 1
Users Yesterday : 4
Users Last 7 days : 49
Users Last 30 days : 146
Total Users : 10924
Views Today : 1
You must be logged in to post a comment.