எப்படி வந்தது ஓசி?
இலவசமாகக் கிடைப்பதை ஓசியில் கிடைத்தது என்று சொல்கிறோம். இது எப்படி புழக்கத்துக்கு வந்தது? ஆங்கிலேயர் காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி சார்பில் அனுப்பப்படும் அஞ்சல்களுக்குத் தபால் தலை ஒட்ட வேண்டியதில்லை என்ற நடைமுறை இருந்தது. அதற்கு பதிலாக ஓ.சி.எஸ்.
(OCS On COMPANY Service) என்று முத்திரை குத்தி அனுப்புவார்கள். இப்படி இலவசமாக அனுப்புவதை ‘ஓசிஎஸ்’ என்று குறிப்பிட்டார்கள். இதுவே பின்னாளில் எல்லா இலவசங்களுக்கும் ‘ஓசி’ என்று சொல்லும்படி ஆயிற்று.
======================================
பென்சில் நாவலாசிரியர்
எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர். இவர் தன் நாவல்களை பென்சிலால்தான் எழுதுவார். காரணம் கேட்டதற்கு, ஏதேனும் தவறு, திருத்தம் என்று இருந்தால், சுலபமாக ரப்பரால் அழித்துவிட்டு மறுபடி எழுதலாமே என்பார். பொதுவாகவே இவரது பென்சில் படைப்புகள் பளிச்சென்று எந்த அடித்தல், திருத்தலும் இல்லாமல் இருந்ததற்கு இதுதான் காரணம்.
======================================
தமிழ்தான் முதலில்!
இஸ்ரேல் நாட்டிலுள்ள ஜெருசலேமில் ஓர் தேவாலயம் உள்ளது. அங்குள்ள சுவர்களில் இயேசு கற்பித்த ஜபங்கள் 68 மொழிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழும் ஒன்று என்பதோடு, ஆலயத்துக்குள் நுழையும்போது முதலில் கண்ணில் படுவது தமிழில் எழுதிவைக்கப்பட்ட ஜபங்கள்தான் என்பது பெருமைக்குரிய விஷயம்.
======================================
தரங்கம்பாடி காற்றே நில்லு
தமிழ்நாட்டிலுள்ள தரங்கம்பாடி (காரைக்காலிலிருந்து 15 கி.மீ.) கடற்கரைதான் உலகிலேயே மிகவும் ஆரோக்கியமானது என்கிறார்கள். இங்கே ஓஸோன் அளவு மிக அதிகம்; சுவாசக் கோளாறுகளை அறவே நீக்கவல்லது. சடங்கன்பாடி என்றழைக்கப்பட்ட இவ்வூர் அப்போதைய டச்சுக்காரர்களின் ஆதிக்கத்துக்குட்பட்டு, டிராங்குபார் என்று பெயர் மாற்றம் பெற்றது. சடங்கன் என்றால் சிவன் என்று பொருள்.
======================================
*ஷேக்ஸ்பியருக்கு 18 வயதிலேயே திருமணம் முடிந்துவிட்டது. எட்டு வயது வித்தியாசத்தில் ஆனி ஹேதவே என்னும் 26 வயதுப் பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார்.
*சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய நூல்களை மக்கள் மத்தியில் அவரே படித்து நடித்துக் காட்டுவாராம்.
*காரல் மார்க்ஸ் தன் மகள் பிறந்தபோது அவளுக்கு பால் வாங்கித் தர பணம் இல்லாமல் வறுமையில் வாடினார். அதே மகள் இறந்தபோது அவளை நல் அடக்கம் செய்ய காரல் மார்க்ஸிடம் பணம் இல்லை. அவளுக்கு சவப்பெட்டி வாங்கக்கூட மிகவும் கஷ்டப்பட்டார். தன்னிடமிருந்த ஒரே ஒரு கோட்டை விற்றுத்தான் சவப்பெட்டி வாங்கினாராம்.
*மருத்துவத்தின் தந்தை எனப்படும் ‘ஹிப்பாகிரேட்டஸ்’ மருத்துவம் குறித்து அந்தக் காலத்தில் 70 நூல்கள் எழுதியுள்ளார்.
*ரோம் நகரம் பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன் இனிமையாகப் பாடுவாராம். தனது இனிமையான குரல் வளர்ச்சி பெற நீரோ தினமும் உணவில் வெங்காயம் சேர்த்துக் கொண்டார்.
**விஞ்ஞான மேதை கலிலியோவின் காலத்தில் காலத்தைக் காட்டும் கடிகாரங்கள் நடைமுறைக்கு வரவில்லை. கலிலியோ தம்முடைய ஆராய்ச்சிகளின்போது கால அளவை நிர்ணயிப்பதற்கு தம்முடைய கைகளின் நாடித் துடிப்பை அளவுகோலாகக் கொண்டார்.
*லியனார்டோ டா வின்சி, தனது இடது கையில் காகிதத்தில் வலமிருந்து இடமாக எழுதினார். அவரது ஆராய்ச்சி நூல்களை முகம் பார்க்கும் கண்ணாடியின் உதவியால் மட்டுமே படித்துப் பார்க்க முடியும்.
*ஆச்சார்ய வினோபா பாவே தன் வாழ்நாளில் ஓட்டுப் போட்டதே இல்லை.
*எந்தப் பள்ளியிலும் படிக்காத கி.ஆ.பெ.விஸ்வநாதன், இரண்டு பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்றார்.
*ஜான் கென்னடி இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால், பிற்பாடு அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தாராம்.
*சர் ஐசக் நியூட்டன் தனது கணிதப் பிரச்னைகளுக்கெல்லாம் வழி கண்டுபிடித்தது அவரது கனவுகளில் தானாம்.
*பெர்ட்ரண்ட் ரஸல் தனது வாழ்வில் நான்கு முறை திருமணம் செய்து கொண்டார். அவரது நான்காவது திருமணம் 80 வயதில் நடந்தது.
*ஜெர்மன் தத்துவஞானி நீட்சே, பல ஆண்டுகள் மனநோய் மருத்துவமனையில் இருந்தார். கடைசிவரை அவர் பைத்தியம் தெளியவே இல்லை. மன நோயாளியாகவே இருந்து இறந்த நீட்சேயின் கடைசி வாசகம் என்ன தெரியுமா? ‘‘நான்கூட சில நல்ல புத்தகங்களை எழுதியிருக்கிறேன் போலிருக்கிறதே..!’’
*ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக இருந்த காலம் முழுவதும் அவரது பூட்ஸை அவரே துடைத்துக் கொண்டாராம்.
*மகாகவி பாரதியார் தன் வாழ்நாளில் அதிகம் உபயோகப்படுத்தியது பென்சில் மட்டுமே. அதுவும் அவர் காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த பெருமாள் செட்டி நிறுவனம் தயாரித்த பென்சிலைத்தான் அவர் மிகவும் விரும்பிப் பயன்படுத்தினாராம்.
*நாத்திகவாதியான இங்கர்சால் தன் மகள் மாடிப்படியில் இருந்து கீழே விழுந்தபோது, ‘‘ஓ மை காட்’’ என்று கத்தியுள்ளார்.
*மாவோ தனது இளம் பருவத்தில்அருகில் உள்ள மலைக் குன்றுகளிலேயே எப்போதும் அலைந்து திரிந்து கொண்டிருப்பாராம். இந்தப் பயிற்சி தான் அவருக்கு பின்னாளில் தன் பெரும்படையுடன் 1600 மைல் மலைகளிலேயே ‘நீண்ட பயணம்’ போக உதவியது.
*சர்வாதிகாரி ஹிட்லர் ஒரு ஓவியர். ஹிட்லர் இளைஞனாக இருந்தபோது வியன்னா ஓவியக் கல்லூரியில் சேர விரும்பினார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. ஆனால் அவர் சுய முயற்சியால் ஓவியம் வரையக் கற்றுக் கொண்டார். அவர் 1911 முதல் 1914 வரை வரைந்த வாட்டர் கலர் ஓவியங்கள் 80,000 டாலருக்கு விலை போனது.
*உகாண்டாவை ஆண்ட சர்வாதிகாரி இடி அமீன், ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் கூட்டத்துக்கு ஒருமுறை பல்லக்கு போன்ற வாகனத்தில் போனார். அவரைச் சுமந்து சென்றது நான்கு ஐரோப்பிய வெள்ளையர்கள். ‘‘கறுப்பினத்தவரை வெள்ளையர்கள் அடிமையாக நடத்தியதற்கு இது பதிலடி’’ என்றார் அவர்.
*சமூக வலைத்தளமான ட்விட்டரில் இணைந்த முதல் உலகத் தலைவர், அமெரிக்க அதிபர் ஒபாமா. அவர் 2007ம் ஆண்டிலேயே ட்விட்டர் அக்கவுன்ட் ஆரம்பித்துவிட்டார்.
*குரங்கு முகம் போலவே அச்சு அசலாகக் காணப்படும் ஆர்க்கிட் மலர் உள்ளது.
*நெப்ரஸ்கா எனும் அமெரிக்க மாகாணத்தில் உள்ளது மோனோவி. இந்த ஊரில் எல்சி எய்லர் என்ற ஒரே ஒரு பெண்மணி மட்டுமே வசிக்கிறார். அவரே மேயர். அவரே வரி கட்டிக் கொள்கிறார்!

*1896ல் பிரிட்டனுக்கும் ஸான்சிபாருக்கும் இடையே ஒரு போர் நடந்தது. 38 நிமிடங்களில் ஸான்சிபார் சரணடைந்ததால், இதுவே உலகின் மிகக் குறுகிய கால யுத்தம் என பெயர் பெறுகிறது.
நாட்டின் அளவு
பிரான்ஸ் நாட்டுக்கும், ஸ்பெயின் நாட்டுக்கும் இடையே உள்ள ஒரு குட்டி நாடு, அன்டோரா. இது எவ்வளவு சிறிய நாடு என்பதை அதன் ராணுவ ‘பலத்’தை வைத்தே அனுமானிக்கலாம். இந்நாட்டின் ராணுவத்தில் ஒரு அதிகாரி, 6 சிப்பாய்கள், 4 பொது ஊழியர்கள் என மொத்தமே 11 பேர்தான்.
கேலிப் பாடலே குழந்தைப் பாடலாயிற்று!
‘பாபா பிளாக் ஷீப்’ என்று குழந்தைகளுக்கான நர்ஸரி ரைம் ஒன்று உண்டு. இது குழந்தைகளுக்காக எழுதப்பட்டதே அல்ல. 1275ம் ஆண்டு, இங்கிலாந்து அரசு, கம்பளி உடைகள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிக வரி விதித்ததை எதிர்த்து அரசை கேலி செய்து எழுதப்பட்ட பாடல் இது!






Users Today : 0
Users Yesterday : 2
Users Last 7 days : 37
Users Last 30 days : 138
Total Users : 10925
Views Today :
NICE