நாமும் நம் முன்னோர்களும்!

நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல: விவசாயத்தை நன்கு அறிந்த மேதைகள்!

ஒரு விவசாயி ஒரு இடத்தை வாங்கும் முன்பாக, முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் அங்கே தங்குவார்.

விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உயிர்’ இருக்கிறதென்று அர்த்தம். கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லையென்று
அர்த்தம்.

சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர். இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால், சேவல் மண்ணைக் கீறி அதனுள்
உள்ள புழுக்களைத் தின்று மறுநாள் தெம்பாகக்கூவும்.

தோண்டி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது.

ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்குள் மேய
விடுவாராம். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுமாம்.

அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால்
வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

”அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்ன்னு சொல்லி மக்களை நோயாளியாக்கி அவர்கள் உயிரைக் காப்பாற்ற
அவர்களையே மிரட்டிக் காசு பறிப்பது எப்படி உண்மையான அறிவியல் வளர்ச்சியாகும்?

ஆனால் இயற்கையை கடவுளாகப் பாவித்து வணங்கி, இயற்கையோடு வாழும் மனிதனை படிப்பறிவில்லாதவன் என்கின்றார்கள். அது எப்படி நியாயம்!

நம் முன்னோர்கள் பல விஷயங்கள் நாம் கற்றுக்கொண்டு செய்வதற்காக அள்ளித் தெளிவித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். நாம்தான் கற்றுக்கொள்ள
வேண்டும்!

களி சாப்பிடுவதைப் பெருமையாக நினைத்திருந்தால், ஓட்ஸ்ஸூம்,  நூடூல்ஸூம் வந்திருக்காது.

கூழையும்,  மோரையும் பருகியிருந்தால் கோக்கும் பெப்சியும் வந்திருக்காது.

கடலை மிட்டாயையும்,  எள்ளு உருண்டையையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் 5 ஸ்டார் சாக்லேட்ஸ் வந்திருக்காது.

வேட்டி கட்டி பழகி இருந்தால் பீட்டர் இங்கிலாண்ட் வந்திருக்காது.

தாவணி கட்டி பழகியிருந்தால் ஜீன்ஸ் வந்திருக்காது.

மஞ்சள் பூசிப் பழக்கியிருந்தால் பன்றி கொழுப்பில் தயாரான முக கிரீம்கள் வந்திருக்காது. 

எல்லாம் நம்மை அறியாமல் நம்மைப் பிடித்துக் கொண்டதாகும்.

மாற்றத்தின் விழைவு ஜல்லிக்கட்டில் வந்து நிற்கிறது. விவசாயம் தழைக்க இனியேனும் சூளுரைக்க வேண்டும்.  கலாச்சாரம் சார்ந்து பழக்கங்களை
மாற்றுவோம். ரோட்டோரங்களில் சீம வாத நாரயண மரத்திற்குப் பதிலாக வேப்பமரம் , புளியமரங்களை நடுவோம். 

இனியேனும் விழித்துக் கொண்டு, கடைக்குச் சென்று ப்ரஷ் என்பதை விட வாசலில் வரும் பாட்டியிடம் கீரை, காய்கறிகளை வாங்கலாம்.

வாடியிருந்தாலும் உண்மையில் அதுதான் ப்ரஷ். (Fresh)

About முத்தமிழ்

என்னை எனக்கு பிடிக்கும்!!!!! எனக்கு பிடித்த எல்லாம் பிடிக்கும் என்ற உள்ளங்கள் எல்லாம் எனக்கும் பிடிக்கும்! இசை பிடிக்கும்! இயற்கை பிடிக்கும்! மழை பிடிக்கும்! மழையில் நனைய பிடிக்கும் ! கடல் பிடிக்கும் ! கடலின் மௌனம் பிடிக்கும்! அருவியில் குளிக்க பிடிக்கும்! நல்ல புத்தகங்கள் பிடிக்கும்! இனிய உள்ளங்கள் பிடிக்கும்! பொய் பேசாத நட்பு பிடிக்கும்! முகமூடி இல்லாத உறவுகள் பிடிக்கும்! எனக்காக ஏங்கும் இதயம் பிடிக்கும்! என்னோடு கோபப்படும் என்னோடு சண்டை போடும் என்னவளை எனக்கு பிடிக்கும்! என்னவளின் புன்னகை பிடிக்கும்! என்னவளின் எனக்கான அழுகை பிடிக்கும்! என்னவளின் எனக்கான கண்ணீர் துளிகள்! என்னவளின் கண்ணீர் துளியின் சுவை! என்னவளின் வார்த்தைகள் பேசும் விழிகள் பிடிக்கும்! அவளுடைய அதிராத சிரிப்பு, அவளுடைய நெற்றி பொட்டு! அவளுடைய கூந்தல்! அவள் கண்களில் என் அதிகாலை சூரியன் (விடியல்) என்னவளின் முதல் முத்தம்! என்னவளின் முதல் ஸ்பரிசம்! சேலை, தாவணி எனக்கு பிடிக்கும்! மூக்குத்தி பிடிக்கும்! கவிதைகள் எழுத , வாசிக்க பிடிக்கும்! மலர்களின் நறுமணம் பிடிக்கும்! மாலை ஏகாந்தம் பிடிக்கும்! தென்றல் பிடிக்கும்! எனது தேவதை மகள் பிடிக்கும்! என் தேவதையின் முதல் முத்தம்! என் தேவதையின் முதல் சத்தம்! தனிமை மிகவும் பிடிக்கும்! தனிமையில் என்னவளின் மடியில் படுத்து பாடல் கேட்க பிடிக்கும்! இன்னும் நிறைய பிடிக்கும்!....... பிடிப்பவை பிடித்தவை தொடரும்.........
This entry was posted in ALWAYS USEFUL. Bookmark the permalink.

Leave a Reply