பிறர் பார்க்கிறார்கள், அடுத்தவர் என்ன நினைக்கிறார், மற்றவர்கள் நம்மைப் பற்றி எவ்வளவு மதிப்பிடுகிறார்கள் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை?
எல்லோரும் இந்த போலி கௌரவத்தைப் பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருந்தாலும் தனக்கென்று வரும் போது மறந்துவிடுகிறார்கள்.
உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்ள முடியாமல், நிஜத்தை நிஜமாக ஒப்புக் கொள்ள முடியாமல் நம்மைத் தடுக்கும் உணர்வு தான் இந்த வறட்டு கௌரவம்.
நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக் கிடக்க வேண்டியதில்லை.
———————————————————————————————————–
மற்றவர்களும் நம்மைப்போலவே.
ஒரு பெரிய வியாபாரி ஒரு முறை கப்பலில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தார்.அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன.கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது.அவர் பார்ப்பதற்கு படு பயங்கரமாய் அவருக்குத் தெரிந்தார். ஆள் மிக பலசாலியாகவும், நல்ல உயரமாகவும்,கரு,கருவென்று இருந்தார்.வியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்கு சென்று பொறுப்பாளரிடம், ”இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள்.என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராகத் எனக்குத் தெரியவில்லை என்றார்.பெட்டகக் காப்பாளர் சொன்னார் பரவாயில்லை,கொடுங்கள்.நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.ஆனால் ஒன்று,உங்கள் அறையில் உங்களுடன் வந்திருப்பவரும்,சற்று நேரம் முன்னே இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி, அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்.”என்றார்.
—————————————————————————————————————————–
பழகுவதில் நான்கு விதமான மனிதர்கள்
1.எதிர்பார்த்தது எதுவோ அதற்காகவே பழகுவார்கள். கிடைத்ததும் சென்றுவிடுபவர்கள்.மீண்டும் தேவைப்படும்போது வருவார்கள்.100 % சுயநல வாதிகள் இவர்கள்.
2.பலனை அடைவதற்காக சில நன்மையைச் செய்வார்கள். இப்படிப்பட்டவர்கள் கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் சரியாக இருக்கும்.அவரின் காரியத்தை நிறைவேற்ற நமக்கும் சில காரியம் செய்வார்கள். இப்படிப்பட்டவர்களிடம் தாராளமாக பழகலாம்.ஆனால் இவர்கள் அனைவரிடமும் இப்படி பழக மாட்டார்கள்.
3.பலனை எதிர்பார்க்கவே மாட்டார்கள். அவர்களாகவே அனைத்தையும் செய்வார்கள். “எதற்க்காக செய்கிறீர்கள்?” என்றால் “நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்?” என்பார்கள். அவர்கள் அன்பால் உங்களை தினறடிப்பார்கள். இப்படிப்பட்டவர்களால் தான் நம் சமுதாயம் செழிக்கிறது இப்படிப்பட்டவர்களை உறவினராக நண்பனாக வைத்திருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
4.யாருடனும் பழக்கம் அதிகம் இருக்காது. ஆனால் அன்பு மிகுதியாக இருக்கும். அறிவும் அப்படியே. அல்லது அன்பு செலுத்த தெரியாது. இவர்களிடம் நாம் கேட்டால் பலன் அடையலாம். இவர்களிடம் பழகுவதற்கு தவம் செய்திருக்க வேண்டும்.
மேலே உள்ள முதல் பட்டியலில் இருப்பவர்களால் தான் அதிகம் ஏமாற்றம்
வருகிறது.
—————————————————————————————————————————–
உண்மை!
மிகப்பெரிய கோபக்காரங்களை பார்த்துருக்கீங்களா?
அவங்களை நல்லா கவனிச்சு பாருங்களேன்.
காட்டுக்கத்தலா கத்துவாங்க,எடுத்தெறிஞ்சு பேசுவாங்க,என்ன பேசறோம்னு கூட தெரியாத அளவுக்கு வார்த்தைகளை விடுவாங்க,
சீக்கிரம் உடைஞ்சு போவாங்க, அவசரப் படுவாங்க.தன் பக்கத்து நியாயத்தை எப்படி வெளிப் படுத்தனும்னு தெரியாம, தான் பேச வந்ததை கோபத்தால் மாத்தி கெட்ட பேரு வாங்கிட்டு போவாங்க.
ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க.முக்கியமா நடிக்க மாட்டாங்க.
லைன்ல நிக்கும் போது யாராவது பின்னாடி இருந்து அவசரபடுத்தினா வழிவிடுவாங்க.
யாராவது எங்கேயோ கஷ்டபட்டா யாராவது எங்கேயோ வலிச்சா , டிவியில சீரியல்ல யாராவது வேதனைப் பட்டா இங்கே இவங்களுக்கு வலிக்கும்.
துடிச்சு போவாங்க..பாவம் இல்ல னு தனக்குள்ளே பேசி முனறுவாங்க.
வளர்ந்த குழந்தை போல இருப்பாங்க.
ரொம்ப அமைதியா இருப்பாங்க,அதிகமா தனிமையை நாடுவாங்க,
எல்லோரையும் நேசிப்பாங்க.
தனக்குன்னு இருக்கிற உயிரை ‘தனக்கு மட்டும் தான்’ னு நினைச்சு உருகிடுவாங்க.
எத்தனையோ நெகட்டீவ் அவங்க மேலே இருந்தாலும் ஒரேயொரு விஷயம் அவங்களை முன்னிருப்பு செய்யும்.
அது அடுத்தவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டாங்க எப்போதும். முதுகில குத்தவே மாட்டாங்க உயிரே போனாலும்..
—————————————————————————————————————————–
நான் சிந்திய கண்ணீர்
நான் பட்ட துன்பம்
சிலருக்கு வேடிக்கையாக
இருக்கலாம்
ஆனால் அதன் வலி
என் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்
கடவுளுக்கு தெரியாது!
(நான் நாத்திகன் மூன்று நாட்களாக )
—————————————————————————————————————————–
தவறு செய்ய யாரும் பயப்படுவதில்லை
செய்த தவறு வெளியே
தெரிய கூடாதென்றே பயப்படுகிறார்கள்
—————————————————————————————————————————–
உணரும் வரை
உண்மை கூட
பொய்யாகத்தான் தெரியும்
அனைவருக்கும்
—————————————————————————————————————————–
மௌனத்தையே பரிசாக
கொடு
உன்னை
புரிந்து கொள்ளாத
உறவுகளுக்கு
—————————————————————————————————————————–
நீ யாருக்கு
நல்லது நினைக்கிறாயோ
அவர்களால் தான்
முதலில் நீ
அவமானப்படுத்தப்படுகிறாய்
—————————————————————————————————————————–
காது கொடுத்து
கேட்காதவர்களிடம்
முகம் காட்டி
பேசாதே!
அவர்கள் உணரும் வரை!
—————————————————————————————————————————–
ஏமாற்றி விட்டார்கள் –
இல்லை
பயன்படுத்தி கொண்டார்கள்
—————————————————————————————————————————–
கொஞ்சி பேசியவன்,
கெஞ்சி பேசியவன்,
துணைக்கு வருவது இல்லை,
கோபமாக பேசியவனே,
எப்பொழுதும் துணை இருப்பான்!
—————————————————————————————————————————–
நான் பல விதங்களில்
தோற்று போனாலும்
துரோகத்தால்
வீழ்த்தப்படும்போதுதான்
உடைந்து போகிறேன்
—————————————————————————————————————————–
பிரியமானவர்கள்
ஒரு பொழுதும்
காயப்படுத்த மாட்டார்கள்
என நம்ப வேண்டாம்
சில சமயங்களில்
எதிரியை விட
மோசமாக காயப்படுத்தி விடுவார்கள்!
—————————————————————————————————————————–






Users Today : 1
Users Yesterday : 4
Users Last 7 days : 40
Users Last 30 days : 143
Total Users : 10924
Views Today : 1