நாம் மாறுவோம் என்ற பேராசையில் சொல்லி சென்ற சில தலைவர்களின் வழிகாட்டல்கள்!

  • உழைத்துப் போராடாமல் வெற்றியை அடைய முடியாது!
  • சிறிய தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளைத் தவிர்க்க முடியாது! – கன்ஃபூசியஸ்
  • மனிதர்களிலேயே கேவலமானவர்கள் யார் தெரியுமா? பிற மனிதர்களைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் தனக்காக வாழும் மனிதர்கள்தான்.– ஹெய்ன்.
  • நேர் வழியில் அடைய முடியாததை ஒருநாளும் நேரல்லாத வழியில் அடைந்துவிட முடியாது.- கதே
  • அரிய சாதனைகள் வலிமையினால் அல்ல, விடாமுயற்சியால்தான் சாதிக்கப்படுகின்றன.– சாமுவேல் ஜான்சன்
  • ஒழுக்கம் உண்டாக்காத கல்வியால் ஒருவித உபயோமும் கிடையாது.
  • மனிதன் தோல்வியின் மூலமே மேலும் புத்திசாலி ஆகின்றான்! பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.விவேகானந்தர்
  • மன்னிக்கும் உள்ளத்தில் கடவுள் குடியிருக்கின்றார்! – குருநானக்
  • நாம் படிக்கப் படிக்க நம்மிடமிருக்கும் அறியாமையை அறிந்து கொள்கிறோம்! -ஷெல்லி
  •  தந்திரமும் ஏமாற்றமும் அறநெறி நிற்கப் போதுமான அறிவில்லாத மூடர் செயல்- பிராங்க்லின்
  • எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
  •  காதலையும் கர்ப்பத்தையும் மறைத்து வைக்க முடியாது.-அரேபியா
  • காதல் ஏழு விநாடி, துக்கம் வாழ்க்கை முழுதும்.– அரேபியா
  • காதலைத் தடுத்தல் அதைத் தூண்டிவிடுவது போன்றது.– ஃபிரான்ஸ்
  • செயல்களே காதல், இனிமையான சொற்களல்ல.– ஸ்பெயின்
  • தான் பரிகசிப்பதைத் திரித்துக் கூறுபவன், தான் திரித்துக் கூறுவதைப் பரிகசிப்பதில்லை.– ஹாட்ஜஸன்
  • அனாமதேயமாய்ப் பிறரைப் பழிப்பவன் ஒருவரும் அறியாத தன் சொந்தப் பெயரை ஒவ்வொருவரும் சூட்டும் “கோழை” என்னும் பெயராய் மாற்றிக் கொள்கிறான்.– பெடிட்ஸென்
  • குறை கூறுவது பிறர் மூலம் நம்மைச் சிறுமை செய்து கொள்வதேயாகும்.– பால் ரிச்சர்ட்
  • என்னைப்பற்றி அவதூறு பேசுபவன் என்னுடைய சிறந்த நண்பன். ஏனெனில், அவன் என்னைக் கீழானவனிடமிருந்து விலகச் செய்யும் சல்லடையை ஒப்பான்.– பால் ரிச்சர்ட்
  • ஒரு குற்றம் செய்து விட்டு அதை மறைக்கப் பொய் கூறுகிறவன், குற்றங்கள் ஒன்றுக்கு இரண்டு செய்தவனாகி விடுகிறான்.- வாட்ஸ்
  • வீட்டை விட்டு ஓடுபவன், வீட்டுக்கேத் திரும்பி வருவான்.
  • பொய் எப்பொழுதும் ஆயுதபாணியாயிருப்பினும், தோல்லி அதற்குத்தான். உண்மை உலராமல் ஈரமாகவே இருக்கும்.
  • நன்றி என்பது வானுலகம் போய்விட்டது, போகும்போது ஏணியையும் எடுத்துவிட்டது.
  • அளவுக்கு மிஞ்சிய சாமர்த்தியம், முட்டாள்தனத்தில் போய் முடியும்.
  • அறிவு, நன்னடத்தை, சுயமரியாதை, இவையே நான் வணங்கும் தெய்வங்கள் இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
  • பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது
  • கீழ்ப்படியக் கற்றுக்கொள்.

About முத்தமிழ்

என்னை எனக்கு பிடிக்கும்!!!!! எனக்கு பிடித்த எல்லாம் பிடிக்கும் என்ற உள்ளங்கள் எல்லாம் எனக்கும் பிடிக்கும்! இசை பிடிக்கும்! இயற்கை பிடிக்கும்! மழை பிடிக்கும்! மழையில் நனைய பிடிக்கும் ! கடல் பிடிக்கும் ! கடலின் மௌனம் பிடிக்கும்! அருவியில் குளிக்க பிடிக்கும்! நல்ல புத்தகங்கள் பிடிக்கும்! இனிய உள்ளங்கள் பிடிக்கும்! பொய் பேசாத நட்பு பிடிக்கும்! முகமூடி இல்லாத உறவுகள் பிடிக்கும்! எனக்காக ஏங்கும் இதயம் பிடிக்கும்! என்னோடு கோபப்படும் என்னோடு சண்டை போடும் என்னவளை எனக்கு பிடிக்கும்! என்னவளின் புன்னகை பிடிக்கும்! என்னவளின் எனக்கான அழுகை பிடிக்கும்! என்னவளின் எனக்கான கண்ணீர் துளிகள்! என்னவளின் கண்ணீர் துளியின் சுவை! என்னவளின் வார்த்தைகள் பேசும் விழிகள் பிடிக்கும்! அவளுடைய அதிராத சிரிப்பு, அவளுடைய நெற்றி பொட்டு! அவளுடைய கூந்தல்! அவள் கண்களில் என் அதிகாலை சூரியன் (விடியல்) என்னவளின் முதல் முத்தம்! என்னவளின் முதல் ஸ்பரிசம்! சேலை, தாவணி எனக்கு பிடிக்கும்! மூக்குத்தி பிடிக்கும்! கவிதைகள் எழுத , வாசிக்க பிடிக்கும்! மலர்களின் நறுமணம் பிடிக்கும்! மாலை ஏகாந்தம் பிடிக்கும்! தென்றல் பிடிக்கும்! எனது தேவதை மகள் பிடிக்கும்! என் தேவதையின் முதல் முத்தம்! என் தேவதையின் முதல் சத்தம்! தனிமை மிகவும் பிடிக்கும்! தனிமையில் என்னவளின் மடியில் படுத்து பாடல் கேட்க பிடிக்கும்! இன்னும் நிறைய பிடிக்கும்!....... பிடிப்பவை பிடித்தவை தொடரும்.........
This entry was posted in ALWAYS USEFUL. Bookmark the permalink.