வீணையடி நீ எனக்கு! மேவும் விரல் நானுனக்கு! என் உயிரே கண்ணம்மா….!

பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா…

வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு
காணுமிடந்தோறும் நின்றன் கண்ணினொளி வீசுதடி
மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா…

வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு
பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் ஜோதிமுகம்
ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா….

வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு
பண்ணுசுதி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு
எண்ணி எண்ணி பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே கட்டியமுதே கண்ணம்மா….

வீசுகமழ் நீ எனக்கு விரியுமலர் நான் உனக்கு
பேசுபொருள் நீ எனக்கு பேணுமொழி நான் உனக்கு
நேசமுள்ள வான்சுடரே நின்னழகாய் எத்துறைப்பேன்
ஆசை மதுவே கனியே அல்லு சுவையே கண்ணம்மா….

காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு
வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு
போதமுற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே
நாதவடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா….

நல்லவுயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே
முல்லை நிகர் புன்னகையை மோதுமின்பமே கண்ணம்மா…

தாரையாடி நீ எனக்கு தண்மதியம் நான் உனக்கு
வீரமடி நீ எனக்கு வெற்றியடி நான் உனக்கு
தரணியில் வானுலகத்தில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய் சமைந்தாய் உள்ளமுதே கண்ணம்மா….!!!

About முத்தமிழ்

என்னை எனக்கு பிடிக்கும்!!!!! எனக்கு பிடித்த எல்லாம் பிடிக்கும் என்ற உள்ளங்கள் எல்லாம் எனக்கும் பிடிக்கும்! இசை பிடிக்கும்! இயற்கை பிடிக்கும்! மழை பிடிக்கும்! மழையில் நனைய பிடிக்கும் ! கடல் பிடிக்கும் ! கடலின் மௌனம் பிடிக்கும்! அருவியில் குளிக்க பிடிக்கும்! நல்ல புத்தகங்கள் பிடிக்கும்! இனிய உள்ளங்கள் பிடிக்கும்! பொய் பேசாத நட்பு பிடிக்கும்! முகமூடி இல்லாத உறவுகள் பிடிக்கும்! எனக்காக ஏங்கும் இதயம் பிடிக்கும்! என்னோடு கோபப்படும் என்னோடு சண்டை போடும் என்னவளை எனக்கு பிடிக்கும்! என்னவளின் புன்னகை பிடிக்கும்! என்னவளின் எனக்கான அழுகை பிடிக்கும்! என்னவளின் எனக்கான கண்ணீர் துளிகள்! என்னவளின் கண்ணீர் துளியின் சுவை! என்னவளின் வார்த்தைகள் பேசும் விழிகள் பிடிக்கும்! அவளுடைய அதிராத சிரிப்பு, அவளுடைய நெற்றி பொட்டு! அவளுடைய கூந்தல்! அவள் கண்களில் என் அதிகாலை சூரியன் (விடியல்) என்னவளின் முதல் முத்தம்! என்னவளின் முதல் ஸ்பரிசம்! சேலை, தாவணி எனக்கு பிடிக்கும்! மூக்குத்தி பிடிக்கும்! கவிதைகள் எழுத , வாசிக்க பிடிக்கும்! மலர்களின் நறுமணம் பிடிக்கும்! மாலை ஏகாந்தம் பிடிக்கும்! தென்றல் பிடிக்கும்! எனது தேவதை மகள் பிடிக்கும்! என் தேவதையின் முதல் முத்தம்! என் தேவதையின் முதல் சத்தம்! தனிமை மிகவும் பிடிக்கும்! தனிமையில் என்னவளின் மடியில் படுத்து பாடல் கேட்க பிடிக்கும்! இன்னும் நிறைய பிடிக்கும்!....... பிடிப்பவை பிடித்தவை தொடரும்.........
This entry was posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal. Bookmark the permalink.