சில தவறுகள் நம் வாழ்க்கையை அழித்துவிடும்…..

தவறான நண்பர்களின் சேர்க்கை…

அடுத்தவர்களுக்கு கேடு நினைப்பது..

நம்பிக்கை வாக்குறுதி கொடுத்த பின் ஏமாற்றுவது..

நம்பியவர்களுக்கு செய்யும் துரோகம்…

ஆணவத்தினால் யாரையும் மதிக்காமல் செயல்படுவது…

அடுத்தவன் வீழ்ந்து.. நாம் வாழ நினைப்பது….

ஒழுக்கமான வாழ்க்கை வாழாதது…

நன்றி மறப்பது…

வழியில் வெளிச்சம் இருக்கிறது என்று
விழிமூடிச் சென்றால் தவறு…

வளைந்தால் பலவீனம் என்றும்,
நிமிர்ந்தால் பலமென்றும் கொண்டால் தவறு….

தேவையில்லா ஒன்றை வரவேற்க,
தேவையுள்ள ஒன்றைத் தவிர்த்தால் தவறு….

எதிரிதான் என்றாலும் நொந்திருக்கும் போது
பதிலடி தந்தால் தவறு…..

”சொல்லாதே” என்றுனக்குச் சொன்னதை, ”சொல்லாதே”
என்றெனக்குச் சொன்னால் தவறு….

பொய்யான உறவுகளால்
மெய்யாக ஒருவருக்கும் இன்றி
உதிர்ந்து போய் விடுவார்.

நீ தினமும் தியானம் செய், தினமும் தவறு செய்,

தினமும் தியானம் செய், தினமும் தவறு செய்,

கொஞ்ச நாளில் இதில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்!’

ஒருவேளை தவறு நிற்பதற்குப் பதில் தியானம் நின்றுவிட்டால்?

அதுவும் நல்லதுதான். உன்னுடைய இயல்பு எது என்று புரிந்துவிடும்!

About முத்தமிழ்

என்னை எனக்கு பிடிக்கும்!!!!! எனக்கு பிடித்த எல்லாம் பிடிக்கும் என்ற உள்ளங்கள் எல்லாம் எனக்கும் பிடிக்கும்! இசை பிடிக்கும்! இயற்கை பிடிக்கும்! மழை பிடிக்கும்! மழையில் நனைய பிடிக்கும் ! கடல் பிடிக்கும் ! கடலின் மௌனம் பிடிக்கும்! அருவியில் குளிக்க பிடிக்கும்! நல்ல புத்தகங்கள் பிடிக்கும்! இனிய உள்ளங்கள் பிடிக்கும்! பொய் பேசாத நட்பு பிடிக்கும்! முகமூடி இல்லாத உறவுகள் பிடிக்கும்! எனக்காக ஏங்கும் இதயம் பிடிக்கும்! என்னோடு கோபப்படும் என்னோடு சண்டை போடும் என்னவளை எனக்கு பிடிக்கும்! என்னவளின் புன்னகை பிடிக்கும்! என்னவளின் எனக்கான அழுகை பிடிக்கும்! என்னவளின் எனக்கான கண்ணீர் துளிகள்! என்னவளின் கண்ணீர் துளியின் சுவை! என்னவளின் வார்த்தைகள் பேசும் விழிகள் பிடிக்கும்! அவளுடைய அதிராத சிரிப்பு, அவளுடைய நெற்றி பொட்டு! அவளுடைய கூந்தல்! அவள் கண்களில் என் அதிகாலை சூரியன் (விடியல்) என்னவளின் முதல் முத்தம்! என்னவளின் முதல் ஸ்பரிசம்! சேலை, தாவணி எனக்கு பிடிக்கும்! மூக்குத்தி பிடிக்கும்! கவிதைகள் எழுத , வாசிக்க பிடிக்கும்! மலர்களின் நறுமணம் பிடிக்கும்! மாலை ஏகாந்தம் பிடிக்கும்! தென்றல் பிடிக்கும்! எனது தேவதை மகள் பிடிக்கும்! என் தேவதையின் முதல் முத்தம்! என் தேவதையின் முதல் சத்தம்! தனிமை மிகவும் பிடிக்கும்! தனிமையில் என்னவளின் மடியில் படுத்து பாடல் கேட்க பிடிக்கும்! இன்னும் நிறைய பிடிக்கும்!....... பிடிப்பவை பிடித்தவை தொடரும்.........
This entry was posted in Quotes and Must follow. Bookmark the permalink.