நாம் அவர்களுக்கு தேவை இல்லை என்று அர்த்தம்!
உனக்கான அன்பை எல்லோரிடமும் தேடாதே ஏமாந்து போவாய்!
நானாக யாரையும் வெறுக்கவும் இல்லை..!! விலகவும் இல்லை..!!
என்னிடம் பேச விருப்பமில்லாதவர்களிடம் விலகி நிற்கிறேன்…!!
தங்கள் தேவைக்காக பழகும்
உறவுகளுக்கு தேவை முடிந்தவுடன்
நாம் தேவை இல்லாத பொருளாக வீசப்பட்டு விடுகின்றோம்,!
அன்புக்காக போய் கடைசியில் அசிங்கப்பட்டு விலகிவிடுகின்றோம்.
அன்பு என்பது இருபுறமும் இருக்க வேண்டும் அப்போது தான் அது முழுமை பெறும்.
“அது உறவிலும் சரி! நட்பிலும் சரி “
என்றும் நீங்கள் நீங்களாக இருங்கள்..
விரும்பினால் அவர்கள் பழகட்டும்.
வெறுத்தால் அவர்கள் விலகட்டும்..!
நீங்கள் கேட்டு பெறப்படும் அன்பில் உண்மை இருக்காது !
அவர்கள் கேட்காமல் கொட்டப்படும் அன்பிற்கு மதிப்பு இருக்காது !
நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மந்திரங்கள் தேவையில்லை…
சில மறதிகள் போதுமானது….!
Related
About முத்தமிழ்
என்னை எனக்கு பிடிக்கும்!!!!!
எனக்கு பிடித்த
எல்லாம் பிடிக்கும்
என்ற உள்ளங்கள் எல்லாம்
எனக்கும் பிடிக்கும்!
இசை பிடிக்கும்!
இயற்கை பிடிக்கும்!
மழை பிடிக்கும்!
மழையில் நனைய பிடிக்கும் !
கடல் பிடிக்கும் !
கடலின் மௌனம் பிடிக்கும்!
அருவியில் குளிக்க பிடிக்கும்!
நல்ல புத்தகங்கள் பிடிக்கும்!
இனிய உள்ளங்கள் பிடிக்கும்!
பொய் பேசாத நட்பு பிடிக்கும்!
முகமூடி இல்லாத உறவுகள் பிடிக்கும்!
எனக்காக ஏங்கும் இதயம் பிடிக்கும்!
என்னோடு கோபப்படும்
என்னோடு சண்டை போடும்
என்னவளை எனக்கு பிடிக்கும்!
என்னவளின் புன்னகை பிடிக்கும்!
என்னவளின் எனக்கான அழுகை பிடிக்கும்!
என்னவளின் எனக்கான கண்ணீர் துளிகள்!
என்னவளின் கண்ணீர் துளியின் சுவை!
என்னவளின் வார்த்தைகள் பேசும் விழிகள் பிடிக்கும்!
அவளுடைய அதிராத சிரிப்பு,
அவளுடைய நெற்றி பொட்டு!
அவளுடைய கூந்தல்!
அவள் கண்களில் என் அதிகாலை சூரியன் (விடியல்)
என்னவளின் முதல் முத்தம்!
என்னவளின் முதல் ஸ்பரிசம்!
சேலை, தாவணி எனக்கு பிடிக்கும்!
மூக்குத்தி பிடிக்கும்!
கவிதைகள் எழுத ,
வாசிக்க பிடிக்கும்!
மலர்களின் நறுமணம் பிடிக்கும்!
மாலை ஏகாந்தம் பிடிக்கும்!
தென்றல் பிடிக்கும்!
எனது தேவதை மகள் பிடிக்கும்!
என் தேவதையின் முதல் முத்தம்!
என் தேவதையின் முதல் சத்தம்!
தனிமை மிகவும் பிடிக்கும்!
தனிமையில் என்னவளின்
மடியில் படுத்து பாடல் கேட்க பிடிக்கும்!
இன்னும் நிறைய பிடிக்கும்!.......
பிடிப்பவை பிடித்தவை தொடரும்.........