1. பொறாமை வந்தால் தர்ம மார்க்கம் போய்விடும்.
நமக்கு அடுத்தவரைப் பார்த்து பொறாமை வராதவரை நாம்
தர்ம மார்கத்தில் இருப்போம்.எப்போது பொறாமை வருகிறதோ ,
உடனே நாமும் அவர் போல் இருக்க வேண்டும் என ஆசைப்
படுவோம். அவ்வாறு இருக்க குறுக்கு வழிகளை உபயோகிப்போம் .
எனவே பொறாமை தர்ம மார்க்கத்தைப் பறித்து விடும்.
2. கோபம் வந்தால் செல்வம் போய்விடும்.
விசுவா மித்திரருக்கு அவரது தவ வலிமையே செல்வமாகும்.
அவருக்கு கோபம் வந்தவுடன் எவ்வாறு அவர் தவவலிமை
குறைந்து விட்டதோ, அது போல நமக்கு கோபம் வந்தால்
நம்மிடம் உள்ள செல்வம் சென்று விடும்.
3. பேராசை வந்தால் தைரியம் போய்விடும்.
நம்மிடம் அளவுக்கு அதிக பணமோ பொருளோ நகையோ இருந்து,
அதன் மீது அசையும் இருந்தால், பகைவரோ பங்காளியோ,
கள்வரோ, அரசோ ( அரசு என்றால் வரியாக சொத்துக் குவிப்பாக)
அபகரித்து விடுவார்களோ என்ற எண்ணம் வரும்.
அந்த எண்ணமே நமது தைரியத்தை பறித்துவிடும்.
4. கெட்டவர்கள் சகவாசம் வந்தால் நமது ஒழுக்கம் போகும்.
ஒழுக்கம் கெட்டவனுக்கு தொண்டு புரிந்தால் நமது ஒழுக்கமும்
பறி போகும். நாம் நல்லவர்களுக்கு தொண்டு புரியலாம். ஆனால்
சுய லாபத்திற்காக ஒழுக்கம் கெட்டவர்களுக்கு தொண்டு புரிந்தால்
நமது ஒழுக்கமும் போய் விடும் என்பது உறுதி.
மேல் சொன்னவைகள் எதாவது ஒன்று வந்தால் ஒன்று போய் விடும்.
ஆனால் …
5. அஹங்காரம் வந்து விட்டால் அத்தனையும் தொலைந்துபோகும்.
1. பொறாமை வந்தால் தர்ம மார்க்கம் போய்விடும்.
2. கோபம் வந்தால் செல்வம் போய்விடும்.
3. பேராசை வந்தால் தைரியம் போய்விடும்.
4. கெட்டவர்கள் சகவாசம் வந்தால் நமது ஒழுக்கம் போகும்.
5. அஹங்காரம் வந்து விட்டால் அத்தனையும் தொலைந்துபோகும்.
இவை ஐந்தும் அற வழிக்குப் பொருந்தாவையாகும். ஆகவே இவை
ஐந்தும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அழகாக விதுரர் எடுத்துரைக்கிறார்.








Users Today : 0
Users Yesterday : 2
Users Last 7 days : 41
Users Last 30 days : 144
Total Users : 10925
Views Today :
You must be logged in to post a comment.