சில வாழ்வின் கசப்பான உண்மைகள், இன்னும் என்னோடு தொடர்பில்!!!

  • எலி பந்தயத்தில் ( Rat race) என்னை விட யாராவது முன்னொக்கி செல்லும்போது நான் அமைதியாக இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, நான் ஒரு எலி அல்ல & நான் எந்த பந்தயத்திலும் இல்லை.
  • இங்கு நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உண்மை இல்லை அனைத்திற்கும் பின் நிலையான ஒன்று உள்ளது மற்ற அனைத்துமே மாறக்கூடியது
  • எல்லா பூக்களுக்கும் வாசம் இல்லை. 
  • எல்லா நீரும் குடிக்கத்தக்க நீரும் இல்லை,
  • எல்லா மரத்தின் கனியும் சாப்பிட தகுந்தவையல்ல,
  • எல்லா இனிப்பும் விரும்பப்படுவது இல்லை
  • எல்லா ஆடைகளும் மறைப்பதில்லை
  • கண் முன்னாடி இருக்குற சக மனிதனிடத்தில் அன்பு கூற முடியாத ஒருவனால் காணாத கடவுளிடத்தில் அன்பு கூறவே முடியாது
  • நீங்கள் நிச்சயமாக பிறரால் நேசிக்கப்படுவீர்கள் ஆனால், என்றென்றும் அல்ல!
  • என்னதான் மனம்,குணம் ,அன்பு என்றாலும் கூட பொதுவாக புறத்தோற்றமும் அழகும் அதிக ஆதிக்கம் செய்யும் .
  • இங்கு இரண்டே பேர்தான் ஒன்று தன் சிரிப்பில் சந்தோஷம் காண்பவர் – மற்றொன்று மற்றவரின் சிரிப்பதில் சந்தோஷம் காண்பவர் 
  •  நீங்கள் யார் என்பதை உங்கள் பெயர் சொல்வதில்லை செயல் சொல்லும்
  • உங்களுக்குத் தெரிந்த மிகச் சிறந்த மற்றும் நெருங்கிய நபர்கள் உங்கள் மோசமான எதிரியாக மாறக்கூடும்.
  • உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் அதிகம் நம்பாதீர்கள் –  நண்பர்கள் ஆகியோருக்கு அதிகமான தனிப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் உங்களை காயப்படுத்தலாம் மற்றும் நீண்ட காலமாக உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம். 
  • மனிதர்கள் இயற்கையால் ஒட்டுண்ணித்தனமாக இருக்கிறார்கள், சிலர் அதை மறைக்க சிறந்த முகமூடிகளைக் கொண்டுள்ளனர்.
  • உங்கள் முகத்திற்கு எதிராக உண்மையாக இருப்பவரை விட முதுகுக்கு பின்பு உண்மையாக இருப்பவரே முக்கியமானவர்
  • சந்தர்ப்பம் கிடைத்தால் தவறு செய்வீர்கள் என்றால் உங்கள் குணநலனில் ஒரு குறைபாடு இருக்கிறது என்று பொருள்
  • நீங்கள் தவறை உணர்ந்து கேட்டு கொண்ட மன்னிப்பை உங்களுக்கு தருகின்றேன்; ஆனால் உங்கள் மீது இழந்த நம்பிக்கை இழந்தது தான்
  • மனதிற்கு மிகவும் மோசமான காயம் துரோகம் தான்; ஏனென்றால், உங்களுடைய நம்பிக்கையை பெற்ற ஒருவர் தான் சுகமாக இருப்பதற்காக உங்களை காயப்படுத்த தயாராக இருக்கின்றார்.
  • நீங்கள் என்னை, வேண்டும் என்றால் சேர்த்து கொள்வீர்கள், இல்லை என்றால் விட்டு விடுவீர்கள் என்றால், என்னாலும் அதை செய்ய முடியும்
  • எல்லா தவறுகளையும் தம்மிடம் வைத்துக்கொண்டு உங்களை குற்றம் சுமத்தி, குற்ற உணர்வுக்கு ஆளாக்குபவர்களிடம் கவனம் தேவை
  • நீங்கள் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்து, உணர்ந்து தான் செய்கிறீர்கள் என்பது தான் சிலருக்கு வலிக்கின்றது.
  • மிகவும் அன்பு பாராட்டும் ஒருவர் நம் மனதை காயப்படுத்தினால், மௌனமாக இருப்பது நல்லது; ஏனெனில், உங்கள் அன்பே பயன்தராத போது வார்த்தைகள் என்ன பயனை தரக் கூடும்?
  • சில நேரங்களில் அவர்கள் சொல்லும் சாக்கு போக்குகளை கேட்க வேண்டியது இருக்காது; ஏனெனில் அவர்களுடைய செயல்களே உண்மை என்ன என்பதை காட்டி விடும்
  • உங்களை பத்தி எதுவுமே தெரியாத வரைக்கும் தான் மத்தவங்களுக்கு உங்கள் மேல ஆர்வம் இருக்கும்-  சமூகத்தில் போலி மக்கள் அதிக மதிப்புடையவர்கள்.
  • நீங்கள் எவ்வளவு போலியாக நடிக்கிறீர்களோ, உங்களுக்கு அவ்வளவு அதிக நண்பர்கள் இருப்பார்கள்!
  • நீங்கள் பேசிய வார்த்தைகள் மீண்டும் திரும்பபெறமாட்டாது
  • அடுத்தவர்களிடம் நீங்கள் எதினும் எதிர்பார்த்தால் ; அது உங்கள் மனதை புண்படுத்த நீங்களே ஏற்படுத்தும் வழியாகும்
  • தனிமையில் இருப்பது தவறான உறவில் இருப்பதை விட ஆயிரம் மடங்கு மன அழுத்தத்தை மிச்சப்படுத்தும்
  • சில நேரங்களில் நாம் அதிகம் நம்பும் நபர்களே நம் நம்பிக்கையை அதிகம் உடைக்கிறார்கள்.பெரும்பாலான மக்கள் தேவை பொறுத்தே பிறரிடம் பழகுகிறார்கள்.நமக்கு தாக்கத்தை ஏற்படுத்திய எந்த நிகழ்வுகளும் எப்போதும் மனதில் இருந்து மறைவதில்லை.
  • என் செயல்பாடுகளில் உங்களுக்கு பிரச்சினை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்; வேறு யாரிடமும் அல்ல.
  • என்னை மதிக்காதவர்களிடமிருந்து நான் விலகிச் செல்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, என் மதிப்பு அவர்களுக்குத் தெரியவில்லை என்பதே உண்மை.

————————————————————————————————————————–

அகங்காரமும் பொறாமையும் இல்லாவிட்டால் அனைவரும் பேரின்பக் கடலில் மூழ்கி அழியாத அமிர்தத்தை அருந்தலாம்.
– மகாவதார் பாபாஜி

About முத்தமிழ்

என்னை எனக்கு பிடிக்கும்!!!!! எனக்கு பிடித்த எல்லாம் பிடிக்கும் என்ற உள்ளங்கள் எல்லாம் எனக்கும் பிடிக்கும்! இசை பிடிக்கும்! இயற்கை பிடிக்கும்! மழை பிடிக்கும்! மழையில் நனைய பிடிக்கும் ! கடல் பிடிக்கும் ! கடலின் மௌனம் பிடிக்கும்! அருவியில் குளிக்க பிடிக்கும்! நல்ல புத்தகங்கள் பிடிக்கும்! இனிய உள்ளங்கள் பிடிக்கும்! பொய் பேசாத நட்பு பிடிக்கும்! முகமூடி இல்லாத உறவுகள் பிடிக்கும்! எனக்காக ஏங்கும் இதயம் பிடிக்கும்! என்னோடு கோபப்படும் என்னோடு சண்டை போடும் என்னவளை எனக்கு பிடிக்கும்! என்னவளின் புன்னகை பிடிக்கும்! என்னவளின் எனக்கான அழுகை பிடிக்கும்! என்னவளின் எனக்கான கண்ணீர் துளிகள்! என்னவளின் கண்ணீர் துளியின் சுவை! என்னவளின் வார்த்தைகள் பேசும் விழிகள் பிடிக்கும்! அவளுடைய அதிராத சிரிப்பு, அவளுடைய நெற்றி பொட்டு! அவளுடைய கூந்தல்! அவள் கண்களில் என் அதிகாலை சூரியன் (விடியல்) என்னவளின் முதல் முத்தம்! என்னவளின் முதல் ஸ்பரிசம்! சேலை, தாவணி எனக்கு பிடிக்கும்! மூக்குத்தி பிடிக்கும்! கவிதைகள் எழுத , வாசிக்க பிடிக்கும்! மலர்களின் நறுமணம் பிடிக்கும்! மாலை ஏகாந்தம் பிடிக்கும்! தென்றல் பிடிக்கும்! எனது தேவதை மகள் பிடிக்கும்! என் தேவதையின் முதல் முத்தம்! என் தேவதையின் முதல் சத்தம்! தனிமை மிகவும் பிடிக்கும்! தனிமையில் என்னவளின் மடியில் படுத்து பாடல் கேட்க பிடிக்கும்! இன்னும் நிறைய பிடிக்கும்!....... பிடிப்பவை பிடித்தவை தொடரும்.........
This entry was posted in Quotes and Must follow and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply