About முத்தமிழ்
என்னை எனக்கு பிடிக்கும்!!!!!
எனக்கு பிடித்த
எல்லாம் பிடிக்கும்
என்ற உள்ளங்கள் எல்லாம்
எனக்கும் பிடிக்கும்!
இசை பிடிக்கும்!
இயற்கை பிடிக்கும்!
மழை பிடிக்கும்!
மழையில் நனைய பிடிக்கும் !
கடல் பிடிக்கும் !
கடலின் மௌனம் பிடிக்கும்!
அருவியில் குளிக்க பிடிக்கும்!
நல்ல புத்தகங்கள் பிடிக்கும்!
இனிய உள்ளங்கள் பிடிக்கும்!
பொய் பேசாத நட்பு பிடிக்கும்!
முகமூடி இல்லாத உறவுகள் பிடிக்கும்!
எனக்காக ஏங்கும் இதயம் பிடிக்கும்!
என்னோடு கோபப்படும்
என்னோடு சண்டை போடும்
என்னவளை எனக்கு பிடிக்கும்!
என்னவளின் புன்னகை பிடிக்கும்!
என்னவளின் எனக்கான அழுகை பிடிக்கும்!
என்னவளின் எனக்கான கண்ணீர் துளிகள்!
என்னவளின் கண்ணீர் துளியின் சுவை!
என்னவளின் வார்த்தைகள் பேசும் விழிகள் பிடிக்கும்!
அவளுடைய அதிராத சிரிப்பு,
அவளுடைய நெற்றி பொட்டு!
அவளுடைய கூந்தல்!
அவள் கண்களில் என் அதிகாலை சூரியன் (விடியல்)
என்னவளின் முதல் முத்தம்!
என்னவளின் முதல் ஸ்பரிசம்!
சேலை, தாவணி எனக்கு பிடிக்கும்!
மூக்குத்தி பிடிக்கும்!
கவிதைகள் எழுத ,
வாசிக்க பிடிக்கும்!
மலர்களின் நறுமணம் பிடிக்கும்!
மாலை ஏகாந்தம் பிடிக்கும்!
தென்றல் பிடிக்கும்!
எனது தேவதை மகள் பிடிக்கும்!
என் தேவதையின் முதல் முத்தம்!
என் தேவதையின் முதல் சத்தம்!
தனிமை மிகவும் பிடிக்கும்!
தனிமையில் என்னவளின்
மடியில் படுத்து பாடல் கேட்க பிடிக்கும்!
இன்னும் நிறைய பிடிக்கும்!.......
பிடிப்பவை பிடித்தவை தொடரும்.........
You must be logged in to post a comment.