தென்றலாய் நுழைந்த புயலின் தீவிரம்!!! இன்னும் மிச்சமாய் என்னுள்ளே!!பாதிப்பின் அடையாளமாய்!!!

யாழோ மூரலோ தேனோ பேசும் நேரமோ
பாலோ பாதமோ ஆடை காலின் அணிகலோ
கரைகளில் கரையும் வெண்ணுறை கடைத்திடும் மொழிகளா
விழிகளின் வளைவு வானவில் நிறங்களே காதலா
நீ இன்றி மூடுமே என் வானம்
நீதானே என் காதலே என்னாளும்
உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதாடி
என் எண்ணம் யான் நீயே
ஹேய்… கண்ணாடியே…என் பிம்பம் என்னை போல் இல்லையே உனில்…
ஹேய் என் வானொலியே…என் பேச்சு தூறல் போல் கேட்குதே உனில்…
ஹேய்… என் நிழற்துணையே…முரட்டு மௌனம் மென்மையாய் பேசுமா…
ஹே ஹேய் ஹேய் உயிர்க்கதவே…திறக்கும் போதே ஆயிரம் வாசம் வீசுமா… ஆ ஆ…
தோழி தோழி…என்னருந்தோழி சொல்லடி…
நீதானா என்னுள்ளே வீழ்வது…தீரா தூறல்களாய்…
நீதானா என்னுள்ளே மூழ்வது…தூங்காத தீப்பூக்களாய்…
கவிதைகள் சுவைத்திடும் துணையாய்…நீயானாய் நீயானாய்…
புரிந்திடா வரிகளின் பொருளை கேட்கின்றாய்…
என் செய்வேன் சொல்லடி…சொல்லடி சொல்லடி சொல்லடி…
தோழி தோழி சொல்லடி…தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி
ஓஹோ… காதல் என் கவியே…நீ என் அருகில் வந்தாலே…
உலகம் ஏன் இருளுது…பகல் இரவாய் மாறுது…
வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே…
நீயே வெண்பனியே…தீயின் சுவையும் நீயே…
உன்னை மெது மெதுவாக…பயணங்கள் போல தொடங்கிடவா…
மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக…
தவறுகள் இனி சரி என மாற…தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா…
மனம் ஒரு கொதிகலன் ஆக…தவறுகள் இனி சரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா…
உன் காதின் ஓரம் நான்…வரைவேன் காதல் கவிதை…
துடுப்பாக மாறுவேன்…உன் கரையை தாண்டுவேன்…
அடி ராட்சசியே கூச்சம் காணலையே ஓ…ஓ…
உன் மறைவுகளும் முத்தம் கேட்கிறதே… ஓஓ…
ஒரு வேதியல் மாற்றம் என்னுள்…உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே…
உன் இடையில் ஊர்வலம் செல்ல…என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே…
காதல் என் கவியே…நீ என் அருகில் வந்தாலே…
உலகம் ஏன் இருளுது…பகல் இரவாய் மாறுது…
வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே…
கனவே நீ நான் விழிக்கவில்லை…கலைவாய் என்றே நினைக்கவில்லை…
மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை…தொலைந்தேன் தனியே யாருமில்லை…
நீ நிஜம்தானா…இல்லை நிழல்தானா…
பதில் கேட்கிறேன் கிடைக்காதா…நம் ஞாபகங்கள்…
அதை நினைத்திருப்பேன்…எனைத் தேடியே திரும்பாதா… ஆ… ஆ…
காதல் நீ…காயம் நீ… நீ…
கானல் நீயே மறைந்தாயே…வேஷம் நீ…
பொய்கள் நீயே…மாற்றம் நீ… நான் உடைந்தேனே…
காதல் நீ…காயம் நீ… நீ…
கானல் நீயே மறைந்தாயே…வேஷம் நீ…
பொய்கள் நீயே…மாற்றம் நீ… நான் உடைந்தேனே…
கனவே நீ நான்…
கனவே நீ நான் விழிக்கவில்லை…கலைவாய் என்றே நினைக்கவில்லை…
மழையோடு நனையும் புது பாடல்…
நீதான் அழகான திமிரே அடியே அடியே…
காற்றோடு பரவும் உன் வாசம்…
தினமும் புது போதை தானே சிலையே அழகே
அழகே… நான் உனக்கெனவே முதல் பிறந்தேன்…
இளங்கொடியே நீ எனக்கெனவே கரம் விரித்தாய் என் வரமே…
மந்தார பூப்போல…மச்சம் காணும் வேல…
என்னத்த நான் சொல்ல…மிச்சம் ஒன்னும் இல்ல…
முழு மதியினில் பனி இரவினில்…கனி பொழுதினில் ஓடாதே…
முகம் காட்டு நீ முழு வெண்பனி…ஓடாதே நீ ஏன் எல்லையே…
இதழோரமாய் சிறு புன்னகை…நீ காட்டடி என் முல்லையே… நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே… நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியே… உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை… தண்ணீர் கமலம் தானா…முகம் காட்டு நீ முழு வெண்பனி… ஓடாதே நீ ஏன் எல்லையே…இதழோரமாய் சிறு புன்னகை… நீ காட்டடி என் முல்லையே…
வாசம் ஓசை…இவைதானே…எந்தன் உறவே… ஓ…உலகில் நீண்ட…
இரவென்றால்…எந்தன் இரவே…
கண்ணே உன்னால்…என்னைக் கண்டேன்…கண்ணை மூடி…காதல் கொண்டேன்…
பார்வை போனாலும்…பாதை நீதானே…காதல் தவிர…உன்னிடம் சொல்ல…எதுவும் இல்லை…
ஏழு வண்ணம்…அறியாத…ஏழை இவனோ… ஓ… ஓ…உள்ளம் திறந்து பேசாத…ஊமை இவனோ…
காதில் கேட்ட… அ…வேதம் நீயே… ஏ…தெய்வம் தந்த… அ…தீபம் நீயே… ஏ…
கையில்…நான் ஏந்தும்…காதல் நீதானே…நீயில்லாமல் கண்ணீருக்குள்…மூழ்கிப்போவேன்…
வானவில் தேடியே…ஒரு மின்னலை அடைந்தேன்…
காட்சியின் மாயத்தில்…என் கண்களை இழந்தேன்…
என் நிழலும் எனையே உதறும்…நீ நகரும் வழியில் தொடரும்…
ஒரு முடிவே அமையா…கவிதை உடையும்…
உன் ஞாபகம் தீயிட…விறகாயிரம் வாங்கினேன்…
அறியாமலே நான் அதில்…அரியாசனம் செய்கிறேன்…
இலை உதிரும் மீண்டும் துளிரும்…வெண்ணிலவும் கரையும் வளரும்…
உன் நினைவும் அது போல்…மனதை குடையும்…
இலை உதிரும் மீண்டும் துளிரும்…வெண்ணிலவும் கரையும் வளரும்…
உன் நினைவும் அது போல்…மனதை குடையும்…
அருகினில் உள்ள தூரமே அலை கடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சொல்லு
இது நடந்திட கூடுமா இரு துருவங்கள் சேருமா உச்சரித்து நீயும் விலக
தத்தளித்து நானும் மருக என்ன செய்வேனோ
ஏதோ ஒன்று என்னை தடுக்குதே பெண் தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா வந்து என்னை சேர்ந்திடு என் தோள்களில் தேய்ந்திடு
சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன் நாட்கள் போனாலும்
அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எறித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
பழைய மாலையில் புதிய பூக்கள்தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா
வாழ்க்கை ஓர் வட்டம்போல் முடிந்த இடத்தில் தொடங்காதா
வாழ்க்கை ஓர் வட்டம்போல் முடிந்த இடத்தில் தொடங்காதா
சிறுமை கண்டு தவித்தேன் என் சிறகில் ஒன்றை முறித்தேன்
ஒற்றை சிறகில் ஊன பறவை எத்தனை தூரம் பறப்பேன்
அன்பே உன்னை அழைத்தேன் உன் அகிம்சை இம்சை பொறுத்தேன்
சீதை குளித்த நெருப்பில் என்னை குளிக்க சொன்னால் குளிப்பேன்
அழுத நீரில் கறைகள் போய் விடும் தெரியாதா…குறைகள் உள்ளது மனித உறவுகள் புரியாதா
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா
இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா
உள்ளமே உள்ளமே…உள்ளே உன்னை காண வந்தேனே…
உண்டாகிறாய் துண்டாகிறாய்…உன்னால் காயம் கொண்டேனே…
காயத்தை நேசிக்கிறேன்…என்ன சொல்ல நானும் இனி…
நான் கனவிலும் வசித்தேனே…என்னுடைய உலகம் தனி…
சந்தோஷமும் சோகமும்…சேர்ந்து வந்து தாக்க கண்டேனே…
சந்தேகமாய் என்னையே…நானும் பார்த்து கொண்டேனே…
ஜாமத்தில் விழிக்கிறேன்…ஜன்னல் வழி தூங்கும் நிலா…
ஓ… காய்ச்சலில் கொதிக்கிறேன்…கண்ணுக்குள்ளே காதல் விழா… விழா
சின்னச் சின்ன அத்துமீறல் புரிவாய்…என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்…
மலா்களில் மலா்வாய்…
பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்…நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய்…
சத்தமின்றி துயில்வாய்…
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி…சேவைகள் செய்ய வேண்டும்…
நீ அழும்போது நான் அழ நோ்ந்தால்…துடைக்கின்ற விரல் வேண்டும்…
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்…சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்…
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்…காதில் கூந்தல் நுழைப்பேன்…
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்…நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்…
உப்பு மூட்டை சுமப்பேன்…
உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து…கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்…
வெளிவரும்போது போது விடுதலை செய்து…வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்…
மடி மீது நீ இருந்தால்…சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ…
நொடி நேரம் பிரிந்தாலும்…காலங்களும் நின்று போகாதோ…
ஒரு மூச்சில் இரு தேகம்…வாழ்வது நாம் அன்றி வேராரோ…
நம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும்…
என் நெஞ்சம் தாகம் கொல்லுதே… ஓஹோ
கண்ணோடும் நெஞ்சோடும்…உயிரால் உன்னை மூடி கொண்டேனே…
கனவோடும் நினைவோடும்…நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே…
மதி பறிக்கும் மதி முகமே…உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன்…
எங்கே நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே…
மனசெல்லாம் நீதான் நீதானே… ஓஹோ…
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்…இன்று வசப்படவில்லையடி…
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா…ஒரு உருண்டையும் உருலுதடி…
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்…ஒரு நிமிஷமும் வருஷமடி…
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்…ஒரு கலக்கமும் தோன்றுதடி…
இது சொர்க்கமா நரகமா…சொல்லடி உள்ளபடி…
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்…உன் வார்த்தையில் உள்ளதடி…
கோகிலமே நீ குரல் கொடுத்தால்…உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன்…
கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு…உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்…
வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க…உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்…
வருடவரும் பூங்காற்றையெல்லாம்… கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்…
என் காதலின் தேவையை…காதுக்குள் ஓதிவைப்பேன்…
உன் காலடி எழுதிய கோலங்கள்…புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் மனம் காயப்படும்
ஆயிரம் காலத்துபயிரா காலம் தான் பதில் சொல்லும்
ஒரு மாலை நேரத்து மயக்கமா உன்னை நான் இழந்தேன்
இருளில் தெரியும் வெளிச்சமாய் உன்னுள்ளே நான் இருப்பேன்
நானே உன்னைதத்தெடுப்பேன் நீ மீண்டும்
வர காத்திருப்பேன் என் மேல் சாய தோள் கொடுப்பேன்
உன் தோழன் போலே நான் இருப்பேன் தேயாதே என்
நிலவே சாயாதே என் மலரே
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் மனம் காயப்படும்
ஆயிரம் காலத்து பயிரா காலம் தான் பதில் சொல்லும்
வலியே என் உயிர் வலியே…நீ உலவுகிறாய் என் விழி வழியே…
சகியே என் இளம் சகியே…உன் நினைவுகளால் நீ துரத்துறியே…
மதியே என் முழு மதியே…பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே…
நதியே என் இளம் நதியே…உன் அலைகளினால் நீ உரசிறியே…
யாரோ மனதிலே…ஏனோ கனவிலே…
நீயா உயிரிலே…தீயா தெரியலே…
காற்று வந்து மூங்கில் என்னை…பாடச் சொல்கின்றதோ…
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை…ஊமை ஆகின்றதோ…
மனம் மனம் எங்கிலும்…ஏதோ கனம் கனம் ஆனதே…
தினம் தினம் ஞாபகம் வந்து…ரணம் ரணம் தந்ததே…
அலைகளின் ஓசையில்…கிளிஞ்சலாய் வாழ்கிறேன்…
நீயா… முழுமையாய்…
நானோ…வெறுமையாய்…
நாமோ…இனி சேர்வோமா…
மிக மிகக் கூர்மையாய்…என்னை ரசித்தது உன் கண்கள்தான்…
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது…உன் வார்த்தை தான்…
கண்களைக் காணவே இமைகளை மறுப்பதா…வெந்நீர்…
வெண்ணிலா…கண்ணீர்…
கண்ணிலா… நானும் வெறும் கானலா…
யாரோ…யாரோ…மனதிலே ஏனோ…
ஏனோ…கனவிலே ஓ நீயா…ஓ நீயா…உயிரிலே தீயா…தீயா…தெரியலே…
கண்ணாளனே கண்ணாளனே….உன் கண்ணிலே என்னை கண்டேன்
கண் மூடினால் கண் மூடினால்…அந்நேரமும் உன்னை கண்டேன்
ஒரு விரல் என்னை தொடுகையில்…உயிர் நிறைகிறேன் அழகா
மறு விரல் வந்து தொடுகையில்…விட்டு விலகுதல் அழகா
உயிர் கொண்டு வாழும் நாள் வரை…இந்த உறவுகள் வேண்டும் மன்னவா
இதே சுகம் இதே சுகம்…எந்நாளுமே கண்டால் என்ன
இந்நேரமே இந்நேரமே….என் ஜீவனும் போனால் என்ன
முத்தத்திலே பலவகை உண்டு….இன்று சொல்லட்டுமா கணக்கு
இப்படியே என்னை கட்டி கொள்ளு….மெல்ல விடியட்டும் கிழக்கு
அச்சம் பட வேண்டாம் பெண்மையே…எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே
நிலா நிலா என் கூடவா . சலாம் சலாம் நான் போடவா
சதா சதா உன் ஞாபகம் சுகம் சுகம் என் நெஞ்சிலே
நிலவே நிலவே வெயில் கொண்டுவா
மழையே மழையே குடை கொண்டுவா
அன்னை தந்தையாக உன்னை காப்பேனம்மா
அன்பு தந்து உன்னில் என்னை பார்ப்பேனம்மா
அதோ அதோ ஓர் பூங்குயில் இதோ இதோ உன் வார்த்தையில்
அதோ அதோ ஓர் பொன்மயில் இதோ இதோ உன் ஜாடையில்
யார் இந்த குயிலை அழ வைத்தது மலர்மீது தான சுமை வைப்பது
பூக்கள் கூடி போட்டதின்று தீர்மானமே
உந்தன் சிரிப்பை கேட்ட பின்பு அவை பூக்குமே
கண் விழித்துப் பார்த்தபோது…கலைந்த வண்ணமே…
உன் கை ரேகை ஒன்று மட்டும்…நினைவுச் சின்னமே…
கண் விழித்துப் பார்த்தபோது…கலைந்த வண்ணமே…
உன் கை ரேகை ஒன்று மட்டும்…நினைவுச் சின்னமே…
கதறிக் கதறி எனது உள்ளம்…உடைந்து போனதே…
இன்று சிதறிப் போன…சில்லில் எல்லாம் உனது பிம்பமே…
கண்ணீரில் தீ வளர்த்து…காத்திருக்கிறேன்…
உன் காலடித் தடத்தில்…நான் பூத்திருக்கிறேன்
கண்ணிர் துளிகளை…கண்கள் தாங்கும்…
கண்மணி காதலின்…நெஞ்சம்தான் தாங்கிடுமா…
கல்லறை மீதுதான்…பூத்த பூக்கள்…
என்றுதான் வண்ணத்து…பூச்சிகள் பார்த்திடுமா…
மின்சார கம்பிகள் மீது…மைனாக்கள் கூடுகட்டும்…
நம் காதல் தடைகளை தாண்டும்…
வளையாமல் நதிகள் இல்லை…வலிக்காமல் வாழ்க்கை இல்லை…
வருங்காலம் காயம் ஆற்றும்…
நிலவொளியை மட்டும் நம்பி…இலை எல்லாம் வாழ்வதில்லை…
மின்மினியும் ஒளிகொடுக்கும்…
தந்தையையும் தாயையும்…தாண்டி வந்தாய்…
தோழியே இரண்டுமாய்…என்றுமே நான் இருப்பேன்…
தோளிலே நீயுமே சாயும்போது…எதிர்வரும் துயரங்கள்…
அனைத்தையும் நான் எதிா்ப்பேன்…
வெந்நீரில் நீ குளிக்க…விறகாகி தீ குளிப்பேன்…உதிரத்தில் உன்னை கலப்பேன்…
விழிமூடும் போதும் உன்னை…பிரியாமல் நான் இருப்பேன்…கனவுக்குள் காவல் இருப்பேன்…
நான் என்றால் நானே இல்லை…நீதானே நானாய் ஆனேன்…நீ அழுதால் நான் துடிப்பேன்…
உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்
அன்பே அன்பே நீ என் பிள்ளை….தேகம் மட்டும் காதல் இல்லை
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…..உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…..உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
அன்பே அன்பே நீ என் பிள்ளை….தேகம் மட்டும் காதல் இல்லை
கண்ணா என் கூந்தலில்…சூடும் பொன் பூக்களும்…உன்னை உன்னை அழைக்க
கண்ணே உன் கைவளை…மீட்டும் சங்கீதங்கள் என்னை என்னை உடைக்க
கண்களைத் திறந்து கொண்டு….நான் கனவுகள் காணுகிறேன்
கண்களை மூடிக்கொண்டு…..நான் காட்சிகள் தேடுகிறேன்
உன் பொன் விரல் தொடுகையிலே….நான் பூவாய் மாறுகிறேன்
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…..உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்
நானே உன் சுமையாக ஏன் வந்தேன்..சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்
நான் உறங்கும் நாள் வேண்டும்….சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
நான் உறங்கும் நாள் வேண்டும்…சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்….சுகமாக அழ வேண்டும்
இருள் மூடும் கடலோடு நானிங்கே…என் தோணி கரை சேரும் நாளெங்கே
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்
நிழலாக நீ வந்தாய் இது போதும் பேரின்பம்
நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்
ரயில் ஸ்நேகமா புயலடித்த மேகமா
கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே
கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவரும் நெஞ்சிலே
எது கூடுமோ எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே
பொன் மானை பெண் என்று பொய் சொல்ல வந்தாயோ
விண்மீனை கண் என்று மை தீட்டிக் கொண்டாயோ
என் கண்மணி வீதியில் போகும் நேரங்கள்
உன் கால்களில் பொன் மணி பாடும் ராகங்கள்
நீ பேசினால் கேட்கும் நாதஸ்வரம் நீயல்லவோ எந்தன் காதல் வரம்
நீ மங்கையா ஆசையின் கங்கையா
எங்கெங்கு பார்த்தாலும் அங்கங்கு உன் கோலம்
என்னென்ன கேட்டாலும் எல்லாமும் உன் நாதம்
ஓராயிரம் ஜென்மமாய் வாழ்ந்த சொந்தங்கள்
ஓர் பாவையில் வந்ததே அந்த எண்ணங்கள்
உன் பார்வையில் தானே நான் பார்க்கிறேன்
உன் வாழ்க்கையில் தானே நான் வாழ்கிறேன்
என் கண்ணிலும் நெஞ்சிலும் உன் முகம்
ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் வாழ்வில் புகுந்தாய் நான் தலை தாழ்ந்து தொழுதேன் என் தலை மீது நடந்தாய்
உலகை உலகை உன்னால் வெறுத்தேன் உறவாய் உறவாய் உனையே நினைத்தேன்
இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும் என் பனிப் பூவே உன்னை பார்த்தால் போதும்
ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
நீ எங்கே சென்று சேர்ந்தாலும் உன் நிழல் வழியே வருவேன்
தீயோடு என்னை எரித்தாலும் நீ தீண்டிவிட்டால் உயிர்ப்பேன்
ஒருமுறை முகம் பார்க்க துடிக்குது உள்ளம் காவிரி நதி தாண்டும் கண்களின் வெள்ளம்
காதல் உறவை எரித்திடுமா இதுதான் காதல் சரித்திரமா
உலகை உலகை உன்னால் வெறுத்தேன் உறவாய் உறவாய் உனையே நினைத்தேன்
இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும் என் பனிப் பூவே உன்னை பார்த்தால் போதும்
உலகம் எனக்கென்றும் விளங்காதது…உறவே எனக்கின்று விலங்கானது…
அடடா முந்தானை சிறையானது…இதுவே என் வாழ்வில் முறையானது…
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே…உறவுக்கு உயிர் தந்தாயே…
நானே எனக்கு நண்பன் இல்லையே…உன்னால் ஒரு சொந்தம் வந்ததே…
என்னைத்தானே தஞ்சம் என்று…நம்பி வந்தாய் மானே…
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இடு…விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு…
என்னைத்தானே தஞ்சம் என்று…நம்பி வந்தாய் மானே…
நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே எங்கே நீ அங்கே நான்தான்

About முத்தமிழ்

என்னை எனக்கு பிடிக்கும்!!!!! எனக்கு பிடித்த எல்லாம் பிடிக்கும் என்ற உள்ளங்கள் எல்லாம் எனக்கும் பிடிக்கும்! இசை பிடிக்கும்! இயற்கை பிடிக்கும்! மழை பிடிக்கும்! மழையில் நனைய பிடிக்கும் ! கடல் பிடிக்கும் ! கடலின் மௌனம் பிடிக்கும்! அருவியில் குளிக்க பிடிக்கும்! நல்ல புத்தகங்கள் பிடிக்கும்! இனிய உள்ளங்கள் பிடிக்கும்! பொய் பேசாத நட்பு பிடிக்கும்! முகமூடி இல்லாத உறவுகள் பிடிக்கும்! எனக்காக ஏங்கும் இதயம் பிடிக்கும்! என்னோடு கோபப்படும் என்னோடு சண்டை போடும் என்னவளை எனக்கு பிடிக்கும்! என்னவளின் புன்னகை பிடிக்கும்! என்னவளின் எனக்கான அழுகை பிடிக்கும்! என்னவளின் எனக்கான கண்ணீர் துளிகள்! என்னவளின் கண்ணீர் துளியின் சுவை! என்னவளின் வார்த்தைகள் பேசும் விழிகள் பிடிக்கும்! அவளுடைய அதிராத சிரிப்பு, அவளுடைய நெற்றி பொட்டு! அவளுடைய கூந்தல்! அவள் கண்களில் என் அதிகாலை சூரியன் (விடியல்) என்னவளின் முதல் முத்தம்! என்னவளின் முதல் ஸ்பரிசம்! சேலை, தாவணி எனக்கு பிடிக்கும்! மூக்குத்தி பிடிக்கும்! கவிதைகள் எழுத , வாசிக்க பிடிக்கும்! மலர்களின் நறுமணம் பிடிக்கும்! மாலை ஏகாந்தம் பிடிக்கும்! தென்றல் பிடிக்கும்! எனது தேவதை மகள் பிடிக்கும்! என் தேவதையின் முதல் முத்தம்! என் தேவதையின் முதல் சத்தம்! தனிமை மிகவும் பிடிக்கும்! தனிமையில் என்னவளின் மடியில் படுத்து பாடல் கேட்க பிடிக்கும்! இன்னும் நிறைய பிடிக்கும்!....... பிடிப்பவை பிடித்தவை தொடரும்.........
This entry was posted in Azhiyatha Kolangal kalaiyatha kanavukal and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply