தமிழ்மொழியின் தனித்தன்மை!

1) தமிழ் குமரிநாட்டில் தோன்றிய உலகத்தின் முதன்மொழி.

2) ஒரு தனிமொழி அல்லது உலக முதல்மொழியின் ஆக்கத்தினை அல்லது படிநிலை உருவாக்கத்தைத் தமிழ் மொழியே காட்ட வல்லதாக உள்ளது.

3) தமிழ்ச் சொற்கள் இல்லாத மொழிகள் உலகிலேயே ஒன்றுகூட இல்லை.

4) அறிவியல் அல்லது தருக்க (Logical) அமைப்புடையது தமிழ்மொழி.

5) உயர்ந்தனிச் செம்மொழிகள் ( Classical Language ) எனத்தகுதி பெற்றவை ஒருசில மொழிகளே. அவற்றுள் தமிழ் மட்டுமே உலகவழக்கு அற்றுப்போகாமல் முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் போர்த்தும் அப்பெற்றியதாய், இருவழக்கும் பெற்று என்றும் குன்றாத சீரிளமைத் திரத்தோடு நின்று கன்னித்தமிழொன்று வாழ்கின்றது.

6) தமிழ் தனது செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியைவிட பண்பட்டதாயும் சரியானதாயும் ; பேச்சு வழக்கு செய்யுள் வழக்கு ஆகிய இரண்டிலும் கடன்பெற்றுள்ள சொற்செல்வங்களுடன் விளங்கும் இலத்தீன் மொழியைவிடச் சொல்வளம் உள்ளதாயும் விளங்குகிறது என்று குறிப்பிடுவது அளவுகடந்து கூறுவதாகாது. (வின்சுலோ)

7) அது (தமிழ்), இனிமை என்று பொருள்படுதற்கு ஏற்ப அதனிட்த்தில் கேட்டாரைத் தன்வயமாக்கும் இனிமை பொருந்தியிருப்பதற்கு ஐயமில்லை. (வின்சுலோ)

8) ஆற்றல் மிக்கதாகவும், சில சொற்களால் கருத்தைத் தெரிவிப்பதாகவும் விளங்குவதில் தமிழ்மொழியை எந்த மொழியும் மிஞ்சமுடியாது. உள்ளத்தின் பெற்றியை எடுத்துக் காட்டுவதில் வேறெந்த மொழியும் தமிழைவிட இயைந்ததாக இல்லை. (பெர்சிவல்)

9) எந்நாட்டினரும் பெருமைக் கொள்ளக்கூடிய இலக்கியம், தமிழ் இலக்கியம். தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தைத் தருவது. (எப்.டபிள்யு. கெல்லட்)

10) தமிழ் போன்ற தமிழிய மொழிகளை நன்றாகக் ஐரோப்பியர் ஒருவர் அத்தகைய வியத்தகு மொழியை வளர்த்துள்ள மக்கள் இனத்தை மதிப்போடு கருதாமல் இருக்க முடியாது.

11) தமிழ், தான் ஏற்றிருக்கும் சமற்கிருதச் சொற்களில் பெரும்பகுதியை, ஏன் அவை அனைத்தையுமே அறவே கைவிட்டு, அவ்வாறு கைவிடுதாலொன்றிலேயே பெருநிலைமைப் பெற்றுவிடும். (அறிஞர் கார்ல்டுவெல்)

12) பயிலுவதற்கும் அறிவதற்கும் மிக இலேசுடையதாய் , பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், “சாகாக் கல்வியை” எளிதில் அறிவிப்பதாய் அறிவிப்பதாய் அமைந்த்து தமிழ்மொழி.

13) தமிழ்மொழி ஒரு திறவி (சாவி) போன்றது. அதைக் கொண்டு உலகம் என்னும் பெரிய பூட்டைத் திறக்கலாம். இன்னும் சரியாகச் சொன்னால், தமிழ் ஒரு மாபெரும் மலையைப் போன்றது; அதில் முதலில் ஏறுவதற்குக் கொஞ்சம் கடினமாக இருக்கும், ஆனால் அதன் உச்சியை அடைந்துவிட்டால் ஒரு புதிய உலகத்தையே பார்க்கலாம். (ஆறாம் உ.த மாநாட்டில் அமெரிக்க அறிஞர்)

14) தொன்மை, முன்மை, ஒன்மை (ஒளிமை), எண்மை (எளிமை), இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை எனப் பதினாறு வளங்களும் நிறைவாக உடையது. (மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள்)

15) எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் மட்டுமல்ல வாழ்க்கையின் இலக்கணமான பொருளிலக்கணமும் முறைப்படக் கொண்டு, அகம்-புறம் என இருதிறத்தும் அறம், பொருள், இன்பம், வீடு என வகைப்பட்டு அவற்றை அறிவு-பகுத்தறிவு-மெய்யறிவு-வாலறிவு எனத் தம் அறிவு முதிர்ச்சிக்கு ஏற்பக் கொண்டு ஒழுகி வந்த பொய்யாமை ஏன்ற சமயத்தை அல்லது வாழ்க்கை நெறியை முக்காலப் பொருத்தமாய் உலகினுக்கு தந்தது தமிழேயாகும். (மெய்ப்பொருள் ஞாயிறு பாவலர் அ.பு திருமாலனார்)

16) உலக ஒற்றுமை அல்ல்லது மாந்தநேயம் என்று உலகியம் பேசும் அறிஞர்கள்; தனித்தூய தமிழைக் கடைப்போக ஆராய்ந்து பார்ப்பார்கள் ஆயிடின் தமிழே உலகப்பொதுமொழியாய் – தாய்மொழியாய் – உயிரியக்க உறவுமொழியாய் – மாந்தநேய மாண்புவழியாய் – சமய நெறியாய் – ஓருலக இனத்தின் இனப் பெயராய் விளங்கும் நடுநிலையான உண்மையைத் தெளிவர். உலகமக்கள் யாவரும் ஒருமூத்தவர் என்பதறிந்து அகங்களிப்பர் – அகங்கலப்பர் – இகல் மறப்பர்.

(மெய்ப்பொருள் ஞாயிறு பாவலர் அ.பு திருமாலனார்)

பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றும், “சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பா” என்றும் குறிப்பிடுகின்றார்.

“தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று பாவேந்தர் பாரதிதாசன் தமிழானது தமிழ் பேசும் மக்களின் உயிர் மூச்சு போன்றது என தமிழை பெருமைப்படுத்துகின்றார்

இராமயணத்தில் தமிழ் மொழியியை “மதுரமான மொழி” என கவிச்சக்கரவர்த்தி கம்பர் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

”அறுபடாத இலக்கிய மரபோடு தமிழ் ஒரு பேச்சு மொழியாகவும், இத்தனை நீண்டகாலமாகத் தொடர்ந்து வருவதே தமிழின் மிகப்பெரும் சிறப்பு,”

“தமிழ் தொன்மையின் மிகச் சிறப்பான விஷயமாக நான் பார்ப்பது அது கொண்டிருக்கும் வேர்ச்சொல்கள். இன்று தெலுங்கு, கன்னடம் போன்ற எந்தவொரு இந்திய மொழிகளும் புதிதாக ஒரு சொல்லை உருவாக்க வேண்டுமென்றால் அவர்கள் சமஸ்கிருதத்தை நோக்கித்தான் செல்கிறார்கள். ஆனால் தமிழில் மட்டும் அந்த நிலை இல்லை. தமிழுக்கு தேவையான வேர்ச் சொற்கள் அதனிடமே கொட்டிக்கிடக்கின்றன,”

“மற்ற மொழிகளில் இருக்கும் பண்டைய இலக்கண, இலக்கியங்களில் அரசர்கள், கடவுள்கள் குறித்து மட்டும் பேசப்பட்டு வந்தபோது, தமிழ் மொழியில் கிடைத்திருக்கும் இலக்கண, இலக்கியங்களில் மட்டுமே பாமர மக்களைப் பற்றி பேசப்பட்டிருக்கிறது. இதுவே தமிழின் மாபெரும் தனித்துவம்,”

“கிமு 3ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் மொழிகள் இருந்திருந்தாலும், அது நிரந்தரமாக இருக்கும் வகையில் எழுதப்படவில்லை. பனை ஓலை, பட்டை போன்றவற்றில் மொழிகள் எழுதப்பட்டு வந்திருக்கலாம். கிமு 3ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் அது கற்களில், கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டது. அதேபோல் கிமு 4, 5 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த எத்தனையோ பானை ஓடுகள் மற்றும் குடவறைகளில் தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன.

எனவே இந்தச் சான்றுகளைப் பார்த்தால், அதற்கும் முந்தைய எத்தனையோ ஆண்டுகளாகத் தமிழ் மொழி பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது என்பதை உணர முடியும். ஏனென்றால் திடீரென மொழி தோன்றியிருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை,”

“தமிழ் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பழமை உடையது. நவீன இந்திய மொழிகளின் இலக்கியங்களைவிடத் தமிழ் (இலக்கியம்) ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. பழைய தமிழ் கல்வெட்டுகளைக் கொண்டு ஆராயும்போது, தமிழின் தொன்மை நூலான தொல்காப்பியத்தின் பகுதிகள் கி.மு. 200-ம் ஆண்டினைச் சேர்ந்தவை என்பது தெரியவரும். தமிழின் மிகச் சிறந்த படைப்புகளான சங்கப் பாடல் தொகுப்புகள், பத்துப்பாட்டு போன்றவை கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. இவைதான் இந்தியாவில் எழுதப்பட்ட மிகத் தொன்மையான மதச்சார்பற்ற கவிதைகள். காளிதாசரின் படைப்புகளைவிட இவை 200 ஆண்டுகள் மூத்தவை,”

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட, ஆனால் சமஸ்கிருத்ததில் இருந்து தருவிக்கப்படாத ஒரே இலக்கிய மரபு தமிழுடையதுதான். சமஸ்கிருதத்தின் செல்வாக்கு தெற்கில் வலிமையாக மாறும் முன்பே தமிழ் இலக்கியங்கள் எழுந்துவிட்டன. இந்த தமிழ் இலக்கியங்களுக்குச் சொந்தமாக கவிதை (செய்யுள்) கோட்பாடுகள், சொந்தமாக இலக்கண மரபு, சொந்தமாக அழகியல், எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் தனித்துவமான மிகப்பெரிய இலக்கியத் தொகுப்பு உண்டு. சமஸ்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளில் இருப்பவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இந்திய உணர்வியலைக் காட்டுகின்ற ஒன்றாக இவை இருக்கின்றன. தமக்கென சொந்தமாக மிக வளமையான, பரந்த அறிவு மரபை இவை கொண்டிருக்கின்றன,” 

“ஓங்க லிடைவக்‌ துயர்ந்தோர்‌ தொழவிஎங்கி
ஏங்கொலிநீர்‌ ஞாலத்‌ திருள்‌ அகற்றும்‌–ஆங்கவற்றுள்‌
மின்னேர்‌ தனியாழி வெங்கதிரொன்‌ றேளையது
தன்னேர்‌ இலாத தமிழ்‌

“மல்லிகையின்‌
வண்டார்‌ கமற்தாமம்‌ அன்றோ மலையாத
தண்டாரான்‌ கூடற்‌ றமிழ்‌.”
.மதுரைக்காஞ்சி-பிற்சேர்வு

“என்றுமுள தென்றமிழ்‌.” கம்பராமாயணம்‌


“முத்தமிழால்‌ வைதா ரையுமங்கு
வாழ வைப்போன்‌.” கந்தரலங்காரம்‌.


“இருந்தமிழே உன்னால்‌ இருந்தேன்‌ இமையோர்‌*
விருந்தமிழ்தம்‌ என்றாலும்‌ வேண்டேன்‌.”
–தமிற்விடுதூது

தமிழ்மொழியில் வரும் சுட்டு வினாப் பெயர்களின்
அழகான, தத்துவார்த்தமான ஒழுங்கு முறை உலகில்
வேறு எம்மொழியிலும் இல்லை.
– ராபர்ட் கால்டுவெல்

வீறுடைய செம்மொழி தமிழ்மொழி!
உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி!
– பெருஞ்சித்திரனார்.

மலையிடைப் பிறந்து, மாந்தர் தொழ உயர்ந்து
உலகின் இருளைப் போக்கும் ஆற்றல் பெற்ற அரிய சக்தி
இரண்டு மட்டுமே! ஒன்று செங்கதிர், மற்றது செந்தமிழ்!
– தண்டியலங்காரம்

தனிமைச் சுவையுடைய சொல்லை – எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாம் கண்டதில்லை!
– பாவேந்தர்

ஒலி அமைப்பிலும், பிறமொழிச் சொற்களைத் தன்னில்
கலக்க விடாத தூய்மை பேணலிலும் நிலையாக இருப்பதால்
தமிழ் கன்னித் தமிழாகும்.
– கால்டுவெல்


அறைகடல் உலகிற் பாடை அனைத்தும்வென் றாரி யத்தோ டுறழ்தரு தமிழ்த்தெய் வத்தை உள்நினைந் தேத்தல் செய்வாம்.2—காஞ்சிப்புராணம்‌.

உலகில் 6809 மொழிகள் உள்ளன. அதில் பேசும் மற்றும் எழுதும் மொழிகள் 700, தனி எழுத்துக்களைக் கொண்ட மொழிகள் 100. அதில் ஆறு பொது மொழிகள். அவை ஹிப்ரூ, கிரேக்கம், லத்தின், சமஸ்கிருதம், சீன மற்றும் தமிழ். ஆனால் அதில் தமிழ், சீன மற்றும் ஹிப்ரூ மொழிகள் தான் இன்று வரை பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகின்றது.

தமிழ்மொழியானது கிட்டத்தட்ட 22 விதமாக மக்களால் பேசப்பட்டு வருகிறது.

இதுவரை இந்தியாவில் கிடைத்த 1 லட்சம் கல்வெட்டுக்களில் 60,000-த்திற்கும் அதிகமானவை தமிழிலும், மற்ற மொழிகள் 5 சதவீதத்திற்கும் குறைவான கல்வெட்டுக்களையும் கொண்டுள்ளன. இதிலிருந்து குமரி கண்டத்தில் தோன்றிய முதல் மொழி தமிழ் என்று கூறலாம்.

About முத்தமிழ்

என்னை எனக்கு பிடிக்கும்! எனக்கு பிடித்த எல்லாம் பிடிக்கும் என்ற உள்ளங்கள் எல்லாம் எனக்கும் பிடிக்கும்! இசை பிடிக்கும்! இயற்கை பிடிக்கும்! மழை பிடிக்கும்! மழையில் நனைய பிடிக்கும் ! கடல் பிடிக்கும் ! கடலின் மௌனம் பிடிக்கும்! அருவியில் குளிக்க பிடிக்கும்! நல்ல புத்தகங்கள் பிடிக்கும்! இனிய உள்ளங்கள் பிடிக்கும்! பொய் பேசாத நட்பு பிடிக்கும்! முகமூடி இல்லாத உறவுகள் பிடிக்கும்! எனக்காக ஏங்கும் இதயம் பிடிக்கும்! என்னோடு கோபப்படும் என்னோடு சண்டை போடும் என்னவளை எனக்கு பிடிக்கும்! என்னவளின் புன்னகை பிடிக்கும்! என்னவளின் எனக்கான அழுகை பிடிக்கும்! என்னவளின் எனக்கான கண்ணீர் துளிகள்! என்னவளின் கண்ணீர் துளியின் சுவை! என்னவளின் வார்த்தைகள் பேசும் விழிகள் பிடிக்கும்! அவளுடைய அதிராத சிரிப்பு, அவளுடைய நெற்றி பொட்டு! அவளுடைய கூந்தல்! அவள் கண்களில் என் அதிகாலை சூரியன் (விடியல்) என்னவளின் முதல் முத்தம்! என்னவளின் முதல் ஸ்பரிசம்! சேலை, தாவணி எனக்கு பிடிக்கும்! மூக்குத்தி பிடிக்கும்! கவிதைகள் எழுத , வாசிக்க பிடிக்கும்! மலர்களின் நறுமணம் பிடிக்கும்! மாலை ஏகாந்தம் பிடிக்கும்! தென்றல் பிடிக்கும்! எனது தேவதை மகள் பிடிக்கும்! என் தேவதையின் முதல் முத்தம்! என் தேவதையின் முதல் சத்தம்! தனிமை மிகவும் பிடிக்கும்! தனிமையில் என்னவளின் மடியில் படுத்து பாடல் கேட்க பிடிக்கும்! இன்னும் நிறைய பிடிக்கும்!....... பிடிப்பவை பிடித்தவை தொடரும்.........
This entry was posted in ALWAYS USEFUL and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply